பக்கம்:சாமியாடிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

21

சாமியாடிகள் 21

இவன்களுக்கு எது நியாயம் என்பது முக்கியமில்லை. எவன் நியாயம் பேசுகிறான் என்பதே முக்கியம். ஆகையால், அலங்காரி, கோலவடிவைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, "என் அண்ணாச்சி. மவளே. உட்காரே முழா." என்றாள்.

அங்கிருந்த பீடிப் பெண்கள் பலருக்கு, அலங்காரி மீது கோபம் கோபமாய் வந்தது. ஒவ்வொருத்தியும் தன்னையே கதாநாயகியாக நினைத்துக் கொண்டிருப்பவள். அந்த நினைப்பிலேயே, நடக்கும்போது ஒரு குலுக்கலோடும், இருக்கும்போது ஒரு சிணுங்கலோடும், எழும்போது ஒரு முகவெட்டோடும், பேசும்போதுகூட ஒரு சினிமாப் பாட்டைப் பின்னணியாக முனங்கிக் கொண்டே பேசுகிறவர்கள் இவள்கள். அப்படிப்பட்ட நாயகிக் குணங்களில் ஒன்றுகூட இல்லாத கோலவடிவை, அலங்காரி கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தது அவள்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. இந்தக் கோபத்தை முத்தம்மா, வக்கிரமாய்க் காட்டினாள். மனதுக்குள், ஒரு ஐ.நா. சபையையே குடியிருக்க வைத்திருப்பவள்.

"ஏய் சித்தி. பேச்சுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம். என்ன பேச்சு பேசிட்டே செத்த பேச்சு. அதுவும் ஒரு முழுத்த பொம்புள பிள்ளயப் பார்த்தா இப்டி சொல்லுறது. இப்போ அவளச் சொன்னே. நாளைக்கு எங்களச் சொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்."

"இடையர் பொறுத்தாலும் இடக்குடி நாய் பொறுக்காதாம். கோலவடிவே நான் சொன்னதுக்கு லேசா கோபப்பட்டுட்டு இப்போ சும்மா இருக்காள். ஒங்களுக்கு என்னடி. வந்துட்டு"

அமைதியாய் உட்கார்ந்திருந்த கோலவடிவுக்கு மீண்டும் கோபம் வந்தது. லேசா கோபப்பட்டேன். என்கிறாளே. லேசா இல்ல. இல்ல. நான் நெசமாகவே கோபப்பட்டனாக்கும். அலங்காரிக்கு அது தெரியாமப் போச்சின்னா தெரியப்படுத்தணும்.

"ஏய் அலங்காரி. அத்தே. என்ன சொன்ன..? நான் லேசர் கோபப்பட்டேனா..? அப்படியே இருக்கட்டும். எங்கப்பா முழுசா கோபப்படுவாரு. அப்போ தெரியும் ஒனக்கு. என்னை என்ன சினிமாக்காரின்னு நெனச்சியா..? என்னப் பாக்கத்துக்கு ஒனக்கு என்ன தளுக்கி. மினுக்கியா தெரியுதா..?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/23&oldid=1243296" இலிருந்து மீள்விக்கப்பட்டது