பக்கம்:சாமியாடிகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சு. சமுத்திரம்

234 சு. சமுத்திரம்

பழனிச்சாமி, புஷ்பத்தின் அழுகைச் சத்தம் கேட்டுத் திரும்பினார். அவளை நோக்கி நடந்து, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார். கழுத்தில் கயிறுபோல் முறுக்கிக் கிடந்த அவள் முந்தானையை எதேச்சையாய் விசாலப்படுத்தி, வெறுமனே கிடந்த தோள்பகுதியை மூடியபடியே, அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். இன்னும் எழுந்திருக்காத அலங்காரியோ, "ஏழா. தோள்ல கிடந்த முந்தானைய தூரத் தூக்குழா. என்ன நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியட்டும்" என்று கத்தினான். பிறகு தானே அந்தத் துணியை அவள் தோளில் இருந்து எடுக்கப் போவதுபோல் எழுந்தாள்.

இதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த பேச்சியம்மா, கீழே குனிந்து, இரண்டு கை நிறைய மண்ணயள்ளியபடியே, எழுந்தாள். அலங்காரியின் தலைக்கு மேல், தன் கையைத் தூக்கி, அதை வெறுங்கையாக்கினாள். அலங்காரியின் தலையில் மண்ணும், மண் கட்டிகளும் சரளமாக விழுந்தன. அலங்காரி, பேச்சியம்மாளின் கையைத் தட்டி விடாமலே ஒப்பளியிட்டாள்.

"என் தலையில விழுந்த ஒவ்வொரு மண்ணுக்கும் நீ பதில் சொல்லித் தீரணுண்டி. மண்ணாந்த."

"தன்னை மெச்சிக்கிடாம் தவுடுக் கொளுக்கட்டை சாபமா போடுற. சண்டாளி. முண்ட வீட்டுக்கு வெளில தெரியாம இருந்த என் மச்சான் மவள மயக்கிப் பிட்டியளா பாவி. நீ விளங்குவியாழா பாவி. ஏழா. சந்திரா. நீயும் ரெண்டு கையி மண்ண அள்ளி இந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளி தலையில தட்டுழா."

சந்திரா, கீழே குனிந்து மண்ணை அள்ளாமல், மேலே நிமிர்ந்து அம்மா மேல் அப்பிக் கொண்டாள். தாயின் கையில் இருந்த மண்ணை தரையில் கொட்ட வைத்தாள். இதற்குள் காளியம்மன் கோயில் பக்கமாய் படுத்துக் கிடந்த மேளக்காரர்களும், வில்லுப் பாட்டாளிகளும் ஒடி வந்தார்கள். ஒரே கூட்டம். எல்லோரும் ஒரே சமயத்தில் பேசியதால் சந்தை சத்தமாகக் கேட்டது.

இதற்குள் சுடலைமாடன் கோவிலும் விழித்துக் கொண்டது. கோவிலுக்கு முன்னால், தென்னந்தட்டி விரிப்புகளில் தூங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/236&oldid=1243799" இலிருந்து மீள்விக்கப்பட்டது