பக்கம்:சாமியாடிகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

சு. சமுத்திரம்

236 சு. சமுத்திரம்

கொடுத்தார்கள். அலங்காரி, ஒடிப்போய், ஒரு சுவரின் பக்கம் நின்று கொண்டாள். கரும்பட்டையான்களான நாட்டு வக்கீல், மாயாண்டி, ராமசுப்பு, அருணாசலம் முதலியோர் கைவீசுவது போல் கல் வீசினார்கள். செம்பட்டையான்களான தர்மராசா, தனராசா, ஐவராசா முதலியோர் செம்பட்டையான்களுக்கு தலைமை வகித்தார்கள். அதாவது கல்லெறியும் சொக்காரர்களுக்கு பின்னால் நின்றபடியே, 'விடாதே. பிடி” என்று ஊளையிட்டார்கள். "எறிங்கடா. எறிங்கடா" என்று எரிந்து விழுந்து பேசினார்கள்.

விச்விச் என்ற கல்லெறிச் சத்தம். ஏய். ஏய் என்ற எக்காளச் சத்தம். எம்மோ எய்யோ என்ற பெண்களின் ஒப்பாரிச் சத்தம். தத்தம் பெண்டு பிள்ளைகள் கல்லெறியில் மாட்டிவிடக் கூடாதே என்று அவர்களை இழுத்துப் பிடிக்க அங்குமிங்குமாக ஒடும் பெரியவர்களின் காலடிச் சத்தம். இருதரப்பிலும் கல்லெறியில் விழுந்து கொண்டிருந்தவர்களின் அவலச் சத்தம். எங்கெல்லாமோ ஒடிக் கொண்டிருந்த நாய்களின் ஊளைச் சத்தம். அங்குமிங்கும் அலைந்த பூனைகளின் மியாவ் மியாவ் சத்தம். எங்குமே ஒட முடியாமல் தவித்த கட்டிப்போட்ட ஆடுகளின் மே. மே சத்தம். இங்கே நாட்டு வக்கீல் குப்புற விழுந்தான். அங்கே காஞ்சான் மல்லாந்து கிடந்தார். விழுந்தவர்களைச் சுற்றி எம்மாடி. எம்மாடி என்ற அவசரச் சத்தம்.

இறுதியில் ஆட்கள் அற்றுப்போய், கற்கள் சுயமாக எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற நிலைமை. கல்லெறிக்காரர்கள் குழிகளில் பதுங்கி, சுவர்களில் மறைந்து, மரங்களில் சாய்ந்து கற்களை மட்டுமே வீசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கல், பித்துப் பிடித்துப் போய் நின்ற பழனிச்சாமியின் தலைக்கு மேல் ஒரு அங்குல இடைவெளியில் பறந்தது. இன்னொரு கல், சொக்காரன்களை சமாதானப்படுத்திய எலி டாக்டர் முதுகைப் பிய்த்து அவரை வீழ்த்தியது. காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசிப் பேர் கரும் பட்டையான்களுக்கு கைகொடுப்பது போல் கல் தொடுத்தார்கள்.

இதற்குள் ஊர் கூட்டம் கும்பலாகியது. கல்லெறிந்த கரும்பட்டையான் செம்பட்டையான் கைகளை வளைத்துப் பிடித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/238&oldid=1243801" இலிருந்து மீள்விக்கப்பட்டது