பக்கம்:சாமியாடிகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

237

சாமியாடிகள் 237

கற்களைக் கீழே போடச் செய்தது. இன்னும் கல் வீசிக் கொண்டிருந்த செம்பட்டையான்களை நோக்கி படையெடுத்தது. பிடிங்கடா. தேவடியா மவனுவள என்று சொன்னபடியே அவர்களை நோக்கி ஓடியது.

கீழே கிடந்தபடியே இந்த விபரீதத்தைக் கண்ட எலி டாக்டர், பாம்புபோல் சுருட்டி வைத்த உடம்பை நெடுஞ்சாண் கிடையில் நீட்டி, ஓடிவந்த கூட்டத்திற்கு முன்னால் படுத்தார். இரு கைகளையும் தலைக்கு செங்குத்தாய் நீட்டி கும்பிட்டார். இதுதான் சாக்கு என்று, அக்கினி ராசா குடும்பத்தைப் பிடிக்காத அதே காத்துக்கருப்பன் வகையறாக்களில் சிலர், முன்னால் ஓடியவர்களைப் பின்னால் பிடித்து இழுத்தார்கள். -

எப்படியோ கல்லெறி ஓய்ந்தது. ஆங்காங்கே விழுந்து கிடந்தவர்களை அவர்களின் பங்காளிகள் சுடலை கேள்விலுக்குள்ளும், பழனிச்சாமி வீட்டுக்குள்ளும் தூக்கிப் போனார்கள். எஞ்சியவர்கள், இப்போது சொல்லெறியில் ஈடுபட்டார்கள்.

"ஓங்க பொண்ணு கிடக்க முடியாமல் போனால், நாங்க என்னல பண்ணுவோம்."

"நாங்களும் ஒங்க பொண்ணுல ஒருத்தியக்கூட விட்டு வைக்கப் போறதில்ல."

"நீங்க இங்க வந்து பேகங்க பார்க்கோம்." "நீங்க ஆம்புளைன்னா இங்க வாங்கல."

"நாங்க ஆம்புளதான். இல்லாட்டா ஒங்க குடும்பத்து பெண்ண எங்க குடும்பத்து பய கூட்டிட்டுப் போவானா."

"தேவடியா மவனை. சில்லி சில்லியாய் வெட்டுறோம் பாரு."

இந்த அமளியில் ஊர்க்காரர்கள் அனைவரும், கூட்டங் கூட்டமாய் நின்று, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, பழனிச்சாமி வீட்டையும், மெளனமாகப் பார்த்தார்கள். கோலவடிவா. பழனிச்சாமி மகள் கோலவடிவா இப்டிப் பண்ணிட்டாள்? இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/239&oldid=1243802" இலிருந்து மீள்விக்கப்பட்டது