பக்கம்:சாமியாடிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சு. சமுத்திரம்

22 சு. சமுத்திரம்

அலங்காரி சரணடைகிறவள் போல், மடியில் கிடந்த பீடித்தட்டைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு, தன்னிலை விளக்கமாகவும், அவளைச் சமாதானப்படுத்துவது போலவும் பேசினாள்.

"ஒன் மேல இருக்கிற பாசத்துல பேசிட்டேன். மருமகள் என்கிற உரிமையில பேசிட்டேன். வேற தப்பான எண்ணத்துல பேசல. துளசிங்கம் சினிமாப்படம் எடுக்கவும் வேண்டாம். அப்படியே எடுத்தாலும் நீ அவன்கூட நடிக்கவும் வேண்டாம். ஆளை விடும்மா."

இன்னொருத்தி இடைமறித்தாள். "எம்மாடி. சினிமா வந்த பிறவுதான் தகராறு வரும். துளசிங்கம் மச்சான், படம் எடுக்கதுக்கு முன்னாலேயே தகராறு வருது பாருங்க.."

அந்தப் பெண்களில் எவளும் இடைமறித்துப் பேசிய தமாஷை ரசித்துச் சிரிக்கவில்லை. தன்னைத்தான் கதாநாயகி என்று துளசிங்கமோ அல்லது அவன் சித்திக்காரியோ தேர்ந்தெடுக்கும் வரை சிரிப்பதில்லை என்று உறுதி பூண்டவர்கள் போல் வாய்களைப் பற்கதவுகளால் அடைத்தார்கள். இவர்களில் தனி ரகம் பாவாடை சந்திரா. இந்த ஒரு விவகாரத்திற்கு கோபப்பட வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்று அவள் குழம்பும்போது, அவளுக்கு வேண்டியவர்கள், அந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொள்வாள். பெரியப்பர் மகள் கோலவடிவு கதாநாயகி தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்று, ரசித்துச் சிரித்தவள், இப்போது கோலவடிவே கோபப்பட்டதால், அந்தத் தேர்வு மோசம் என்றும், ஆகையால் தானும் கோபப்பட்டுச் சொக்கார பலத்தைக் காட்ட வேண்டும் என்று கத்தினாள்.

"ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு அடாவடி ஆகப்படாது அலங்காரி அத்தே. எங்க அக்காவைப் பார்க்கக் குலுக்கி மினுக்குகிற சினிமாக்காரி மாதிரியா தெரியுது. வாலிபப் பயலுவ கூட டூயட் பாடுற மாதிரியா தெரியுது. இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால். எங்கக்காவைப் பத்தி என்னவோ சொல்லுவே போலுக்கு. எங்கக்கா ஒன்னை மாதிரி சிலுக்குறாளா. இல்ல மினுக்குறாளா.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/24&oldid=1243297" இலிருந்து மீள்விக்கப்பட்டது