பக்கம்:சாமியாடிகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

241

சாமியாடிகள் 24?

"என்ன சித்தி இதுல்லாம்.? இவள் என் இப்டி வந்திருக்காள். சொல்லு சித்தி. சொல்லு சித்தி."

"சொல்லத்தானே வந்திருக்கேன். ஆதியோட அந்தமாச் சொல்லுறேன். சொன்னாலும் ஆறாது. சொல்லியும் மாளாது."

"என்ன நடந்தது சித்தி. சொல்லித் தொலை சித்தி."

அலங்காரி சொல்லத் தொடங்கவில்லை. சேலை மடிப்பில் ஒன்றை விலக்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தாள். கலங்கி நின்ற புஷ்பத்தை, கையைப் பிடித்து உட்கார வைத்தாள். திண்ணைத் தூணைப் பிடித்தபடி நின்ற கோலவடிவை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, அவள் யாரோ எவளோ என்பதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோலவடிவால் பொறுக்க முடியவில்லை.

"அத்தே. அத்தே." "அத்த. இன்னும் சாகாம இருக்கத்தான் செய்யுதேன்." அலங்காரி, கோலவடிவைப் பார்க்காமலே பதிலளித்தாள். ஆனால் உட்கார்ந்திருந்த புஷ்பம் எழுந்தாள். கோலவடிவை நேருக்கு நேர் பார்த்தபடி பேசினாள்.

"ஒனக்கென்ன..? நீ எடாத எடுப்பு எடுத்து எங்கண்ணன கடத்திட்டு வந்துட்டே. ஒனக்கு கொளுப்புப் பிடிச்சா. நான் என்ன பண்ண முடியும். இந்த ஜாக்கெட்டப் பாரு, ஒங்கண்ணன் என்னை என்ன பாடு படுத்தியிருக்கான்னு."

புஷ்பம், பாதி அலங்காரியாலும், பாதி திருமலையாலும், பிய்க்கப் பட்ட ஜாக்கெட்டைக் கோலவடிவிற்குக் காட்டியபோது, துளசிங்கம் துள்ளி எழுந்தான்.

"குட்டாம்பட்டிக்கு இப்பவே போயி, செறுக்கி மவன என்ன பாடு படுத்துறேன் பாரு. என் தங்கச்சிய அவன் தங்கச்சி மாதிரி நெனச்சிட்டான் பாரு. ஏய் புஷ்பம் நீயாவது சொல்லுழா."

“நானே சொல்லுதேண்டா. நானே சொல்லுதேன். கோழி கூவுறதுக்கு முன்னாலயே நானும் இவளும் சுடலைமாட சாமி

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/243&oldid=1243806" இலிருந்து மீள்விக்கப்பட்டது