பக்கம்:சாமியாடிகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

243

சாமியாடிகள் 243

இவரு நோட்டோ பூட்டோ செய்து வச்சிருக்காராம். ஏட்டய்யாவ, நான் தனியா கவனிக்கும்போது, தனியா சொன்னாரு..."

"அப்புறம்" "திருமலையை விலங்குபோட்டு இழுத்துட்டு வாரதுக்கு, சப்-இன்ஸ்பெக்டரு போலீஸை அனுப்பி இருக்காரு அவசரத்தில இந்த பேச்சியம்மாவை போலிஸ்ல சொல்ல மறந்துட்டேன். அவள்தான் தலையில மண்ணள்ளிப் போட்டாள். இந்நேரம் திருமலை கையிலயும் காலுலயும் விலங்கு ஏறி இருக்கும்."

"செறுக்கி மவனுக்கு நல்லா வேணும்."

கோலவடிவு குமுறிப் போய் நின்றாள். அவர்களிடம் பேசுவதாய் நினைத்து தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.

- "அத்தே. எங்கண்ணாவ ஒண்ணும் பண்ணாதிய அவசரத்துல

ஏதோ பண்ணியிருப்பான். அதுக்கு என் மேல இருக்கிற பாசம்தான் காரணம். ஒங்க மேலே இருக்க கோபமுல்ல. துளசிங்கம் மச்சான், எங்கண்ணாவ அப்டி திட்டாதேயும். இனுமே அவன் ஒமக்கு மச்சினன். மச்சினன் கையில் விலங்கு போட்டா ஒமக்கு கால் விலங்கு போட்டதா அர்த்தம். அய்யோ அண்ணா. எத்தே. எங்கப்பா. எப்டி இருக்கார்..? எம்மா எப்டி இருக்கா..? மச்சான். அவன் தங்கச்சி மாதிரி. என் தங்கச்சிய நெனச்சிட்டான்னு. சொல்லிட்டீரே. சொல்லிட்டீரே. இதுக்கு மேலயும் நான் உயிரோட இருக்கணுமா..?

கோலவடிவு, பேசப்போனதை பேசமுடியாமல், உள்வாங்கினாள். தலை, தனியாய் பிய்ந்து பம்பரமாய் சுழன்றது போல் இருந்தது. ஆகக்கூடியது ஏதுமில்லை என்பதுபோல், கைகளை விரித்தாள். இதற்குள் புஷ்பம் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்ததை ஒப்பித்தாள்.

'பாரு அண்ணா சித்திய... திருமலை என்னைக் கற்பழிச்சுட்டான்னு போலீஸ்ல சொல்லிட்டாள். அந்தப் பன்னாடைப் பயலுவளும் எதையோ சோடிச்சு எழுதி. என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அவரு என் கையைத்தான் பிடிச்சு இழுத்தாரு. அதுவும் கோபத்துலதான். வேற அர்த்தத்துல அவரு பிடிக்கல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/245&oldid=1243808" இலிருந்து மீள்விக்கப்பட்டது