பக்கம்:சாமியாடிகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

247

சாமியாடிகள் 2.47

ஏடாகூடமாக, ஏளனமாகப் பார்த்தார். அவன் அருகே போய் நின்றபடியே போர்ப்பரணி பாடினார்.

"சப்-இன்ஸ்பெக்டர் எப்படிப்பட்டவர்னு இப்பவாது புரியதுதாடா..? தேவடியா மவனே. பாஸ்டர்ட்... என்ன சொன்னே சப்இன்ஸ் பெக்டர்னா காரை விட்டு இறங்கப்படாதோ. இன்னொரு தடவ சொல்லுடா. பார்க்கலாம். போலிஸ் ஒன் மாமன் மச்சான் மாதிரி நெனச்சிட்டே. இல்லே.

சப்-இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் திருமலையின் பாதத்தைத் தட்டிவிட்டார். அவனோ செத்துப் போனவன் போல் சுவரில் கிடந்தான். அந்த நிலையத்திற்கு உள்ளே, இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள ஒடுகலான வழியில், முதல் சுவரில் அமைக்கப்பட்ட கொக்கிகளில் அவன் கைவிலங்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

குப்புறச் சாய்ந்து கிடந்த திருமலை முகத்தை மட்டும் அங்குமிங்குமாக அசைத்தான். உடம்பை அசைக்க இயலாது. சுவருக்குச் சுவராகி விட்டான். அந்தச் சுவர் விழாமல் இருப்பதற்கான அணைப்புக்கல் மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டான். பயங்கரக் குற்றவாளிகளுக்காக விசேஷமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் படவேண்டிய அந்தச் சுவர் கொக்கிகள், அவன் கைகளை விலங்கோடு சேர்த்து இழுத்துப் பிடித்தன. அவனுக்குக் கை வலித்தது. நீட்டிய கையைச் சுருக்கப் போனால், சுவர்க் கொக்கிகள் சுண்டி இழுத்தன. சுவரிலே முகம் போட்டுப் போட்டு மூச்சு முட்டியது. முகத்தைத் திருப்பலாம் என்றால், சுவர் மோவாயை இடித்தது. அவன் முட்டிக்கால்களின் பின்பகுதிகளில் லத்திக் குத்துகள் முத்திரை போட்டிருந்தன. அவற்றில் பூட்ஸ் காலின் அடையாளங்கள் செம்மண் நிறத்தில் தெரிந்தன.

சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஒரு வேன் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, தனது அறையில் கம்பீரமாக உட்கார்ந்தார். இன்னும் வேன்காரர்கள் ஏன் தன்னிடம் வரவில்லை என்பது மாதிரி முகத்தைச் கழித்தார். வாரவன் நேரா வரக்கூடாது.? ரைட்டர்கிட்ட என்ன பேச்சு. நானிருக்கையில்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/249&oldid=1243812" இலிருந்து மீள்விக்கப்பட்டது