பக்கம்:சாமியாடிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

23

சாமியாடிகள் 23

கோலவடிவுக்கும் சித்தப்பா மகள் சந்திரா பேசுவது அதிகப்படியாகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளைக் கட்டுப்படுத்துவது, தான் கதாநாயகியாக நடிப்பதில்லை என்ற முடிவை, கல்யாணமான நடிகைகள் மறுபரிசீலனை செய்கிறார்களே, அப்படி மறுபரிசீலனையாய் கருதப்படும் என்று பயந்துபோய் சும்மா இருந்தாள். ஆனால் அலங்காரியால் அப்படிச் கம்மா இருக்க முடிய வில்லை. லேசாய்க் கோபமும் வந்தது. அதைப் பேச்சாக மாற்றினாள்.

'ரொம்பத்தான் துள்ளாத சந்திரா. போன வருஷம் பள்ளிக்கூடத்து நாடகத்துல கதாநாயகன் மார்புல கண்ணை மூடிக்கிட்டு சாய்ஞ்சு கிடந்தே. சிங்காரன் விசிலடிச்சப்போகூட டயலாக்க மறந்து அப்பிடியே கிடந்த."

"அது பொம்புள போட்ட ஆம்புள வேடம். அதுல என்ன தப்பு?" "நீ பொம்புள கிட்டயே அப்படினன்னா..."

"என்னழா. வாய் ரொம்ப நீளுது? ஒன் புத்திய மாதிரி எல்லோரையும் நெனச்சிட்ட பாரு. இப்பவே எங்க பெரியப்பாகிட்ட சொல்லி ஒன் நாக்க வெட்டிப் போடச் சொல்லுதேன் பாரு. கோலக்கா எழுந்திரு."

"சரியம்மா. தெரியாமச் சொல்லிப்புட்டேன். இந்தப் பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசலாம்."

அந்தப் பெண்களுக்குள் நடந்த ஏடாகோடமான பேச்சை ரசித்துக் கேட்பது போலவும், அதைப் பொருட்படுத்தாதது போலவும், கையில் இருந்த கம்பால் ஆலவேரில் சாரிசாரியாச் சென்ற எறும்புகளை இடித்து இடித்துக் கொன்று குவித்துக் கொண்டிருந்த துளசிங்கத்திற்கு ஆவேசம் வந்தது. கோலவடிவு மேல் மெலிதாகவும், சந்திராமேல் பலமாகவும் வந்தது. சித்திக்குச் சொல்வது மாதிரிச் சொன்னான்.

"நம்ம கண்ணு முன்னாலயே அம்மணமாத் திரிஞ்ச சின்னப் பொண்ணு இந்தச் சந்திரா. ஏதோ பீர்க்கங்கா மாதிரி வளர்ந்துட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/25&oldid=1243298" இலிருந்து மீள்விக்கப்பட்டது