பக்கம்:சாமியாடிகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

சு. சமுத்திரம்

248 சு. சமுத்திரம்

ஏழெட்டுப் பேர், சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றார்கள். துளசிங்கம், தனது சகாக்களையும் அலங்காரி சித்தியையும் பிரமிக்கச் செய்வதற்காக, "ஆளே இளச்சீட்டிங்களே ஸார்" என்றான்சர்வசாதாரணமாக, இதைப் புரிந்துகொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுள்ளென்று விழுந்தார்.

"யோவ் துளசிங்கம். நீயும் போலிஸ். மாமா மச்சானா நெனச்சிட்டே இல்ல. ஒன் சிஸ்டர் கற்பழிக்கப்பட்டிருக்காள். அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும். எங்கேயா போயிட்டாள்? இந்தாம்மா. ஒன் பேரு என்ன?"

"அலங்காரி. எசமான்."

"ஏய் அலங்காரி. ஒன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டே. கற்பழிக்கப்பட்ட பொண்ண எங்கே கடத்திட்டுப் போனே. அவள் வந்த பிறகுதான். நீ போக முடியும்."

"வருவாள் சாமி. வருவாள். கற்பழிச்சவனையே நீங்க இன்னும் பிடிக்கல."

"யோவ். இந்த பொம்புளைக்கு கண்ணு குருடா..."

துளசிங்கம், தனக்கும் கண் குருடு என்பதுபோல் புரியாமல் விழித்தான். சப்-இன்ஸ்பெக்டர் திருமலையைப் பார்த்துக் கண்ணடித்துக் காண்பித்தார். பிறகு அவர்களிடம் அப்படி நடந்து கொள்வது கெளரவக் குறைச்சலாக்கும் என்று ஒரு எண்ணம் திடீரென்னு ஏற்பட, அவர் உடம்பை விறைத்து, முகத்தை முறைப்பாக்கினார்.

எல்லோரும் சுவரில் கட்டப்பட்ட திருமலையையே பார்த்தார்கள். வேன்கார சினிமாக்காரர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. வேன் டயர்களை பஞ்சராக்கி, மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு வேனைத் தள்ள வைத்த கிராமத்து எக்ஸ்டிராப் பயல். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு நாள் வீதம் கிடக்கட்டும். சினிமாக் காமிரா கொண்டு வராமப் போயிட்டோமே. இதையே ஒரு குளோஷப்பாய் ஷாட் எடுத்தால் எந்த தயாரிப்பாளர் கிட்டேயும் வித்துடலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/250&oldid=1243813" இலிருந்து மீள்விக்கப்பட்டது