பக்கம்:சாமியாடிகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

255


"என்னல ராகம் போட்டு பேசுற.? நம்ம குடும்பத்துக்கு நிச்சயித்த பொண்ண செறுக்கி மவன் கூட்டிட்டுப் போயிட்டான். அப்படியும் ஒனக்கு கோபம் வராட்டா நீ மனுஷனா?"

"எனக்கும் கோபம் வரத்தான் செய்யுது. துளசிங்கம் மேல மட்டுமில்ல. ரெண்டு பேருக்கும் இஸ்கு. தொஸ்கு இருக்கது தெரிஞ்சும் அவசர அவசரமாக அந்த கூறு கெட்டவள நம்ம தலையில் போட நெனச்சாரே பழனிச்சாமி. அவரு மேலயும் கோபம் கோபமா வருது.”

"வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதப்பா. பாவப்பட்ட மனுஷன், மகள அந்த ஒநாய்ப் பயலுக்கும் மகன போலீஸ் பயல்வ கிட்டயும் பறிகொடுத்துட்டு பரிதவிச்சு நிக்கார். இரக்கம் இல்லாட்டாலும் இறக்கிப் பேசப்படாது."

"திருமலய எப்போ பிடிச்சுட்டுப் போனாவளாம் பற்குணம்.”

"அவன வீட்டுக்குள்ள பூட்டிப் போட்டிருக்காவ. அப்புறமா அவன் வெளில போகனுமுன்னு கத்துனான்னு கதவ திறந்து விட்டிருக்காவ. திருமலை புளியந்தோப்பு பக்கமா போயிருக்கான். அவன் எப்படியும் வருவான்னு கள்ளச் சாராயப் புதருப் பக்கமா நின்ன போலீஸ்காரங்க அப்படியே தூக்கிட்டுப் போயிட்டாங்க ஊருக்கு வராம பரும்புக் காட்டு வழியா கொண்டு போயிட்டாங்களாம்."

"ஊர் வழியா ஏன் வர்லியாம்." "நீ முன்ன பின்ன போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தால தெரியும். ஆள்பலம் இருக்குற குடும்பத்துல எப்பவும் நேருக்கு நேரா வந்து பிடிக்க மாட்டாங்க. அப்படியே வந்துட்டாலும், சும்மா ஸ்டேஷனுக்கு வாங்கன்னு பூனை மாதிரி பதுங்கிட்டு ஸ்டேஷன்ல போய் புலி மாதிரி பாய்வாங்க. பாவம் அவன என்னபாடு படுத்துறாங்களோ. போய் பார்த்துட்டு வருவோமா.”

"அவன் எந்த ஸ்டேஷன்ல இருக்கானோ. போலீஸ்காரங்க. ஒருத்தன் பிடிக்கலன்னா. அவனப் பிடிச்ச எந்த ரிக்கார்டும் இல்லாம ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷனுக்கு மாத்துவாங்களாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/257&oldid=1244092" இலிருந்து மீள்விக்கப்பட்டது