பக்கம்:சாமியாடிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சு. சமுத்திரம்

24 சு. சமுத்திரம்

பெரியவள் என்கிற நெனப்புல குதிக்காள். போயும் போயும். அவள் கிட்ட போயி. மன்னிப்புக் கேட்ட பாரு. அவளுக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளராமப் போச்சு. இல்லன்னா இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஆடமாட்டாள்."

"இந்தா பாரும். ஒமக்கும் எனக்கும் பேச்சில்லே. போயும் போயுமுன்னு பேசுதியரே. நான் என்ன தெருவுலயா கிடக்கேன். ஆடுறேன்னு வேற சொல்லுதியரு. என்னைப் பார்த்தா ஆட்டக்காரி மாதிரியா இருக்குது. ஒம்ம அக்காவப் போய் ஆடச் சொல்லும். ஒம்ம தங்கச்சியப் போயி ஆடச் சொல்லும். இல்லன்னா இந்த மூளி அலங்காரி மூதேவி சண்டாளியப் போய் ஆடச்சொல்லும். நான் எதுக்கு ஆடனும்."

"நீ ஆடாண்டாம். ஆடுனாலும் அசிங்கமாத்தான் இருக்கும்."

"இதோ பாரு. துளசிங்கம். இதுக்கு மேல பேசினே. எனக்குக் கெட்ட கோபம் வரும்."

"நீ சின்னப் பொண்ணாச்சேன்னு பாக்கேன். இல்லன்னா என்னை, நீ நான்னு பேசுறதுக்கு நடக்குற சங்கதியே வேற. என்ன நடந்து போச்சுன்னு இப்டி குதிக்கே"

"எங்கக்காவ எப்படி சினிமாக் கதாநாயகின்னு சொல்லலாம்.? சும்மா கண்டபடி பேசுறதுக்கு திறந்து கெடக்கோ."

"சரி, எங்க சித்தி சொன்னதையே நான் திருப்பிச் சொல்லுறேன். இதோ இருக்காளே. இந்தக் கோலவடிவு, சினிமாவுல வார கதாநாயகி மாதிரியா இருக்காள்..? தமிழுக்குத் தமிழ் கதாநாயகி மாதிரியும், இந்திக்கு இந்தி கதாநாயகி மாதிரியும் இருக்காள். சரி. சொல்லிட்டேன். இப்போ என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கோ..."

"ஏய் கோலவடிவு. எக்கா. ஒன்னத்தான். எழுந்திரு. இப்பவே நம்ம குடும்பத்துக்காரங்ககிட்ட சொல்லுவோம். எழுந்திரு. ஏன் குத்துக்கல்லு மாதிரி இருக்கே..."

"நீயே நான் சொன்னதைப் போய் சொல்லுறியா. இல்ல. நானே ஒன் குடும்பத்துக்காரன்கிட்ட வந்து சொல்லணுமா. இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/26&oldid=1243301" இலிருந்து மீள்விக்கப்பட்டது