பக்கம்:சாமியாடிகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

சு. சமுத்திரம்

262 சு. சமுத்திரம்

"விவரமாத்தான் சொல்லேன்."

"அலங்காரி போலீஸ்ல என்ன சொன்னாளோ. திருமலை அண்ணாவ போலீஸ்ல அடச்சிட்டாங்க. இப்போ என்னடான்னா. ரெண்டு லோடு போலீஸ் வந்திருக்கு. மூலைக்கு மூலை. போலிஸா நிக்குது. யாரு வீட்டுக்கு வெளியேயும் ஒரு காக்கா குருவிசுட்ட இல்ல. எங்க வீட்டுப் பக்கம்கூட போலீஸ் துப்பாக்கியோட நிக்குது."

"அதான பாத்தேன். எங்க துளசிங்கம் அண்ணா வீட்ல ஒரு மணி நேரத்திற்கு முன்னாலே ஒரு அண்டாவுல சோறு வெந்தது. நாலஞ்சு கோழிவ பிடிபட்ட சத்தம் கேட்டுது."

"வினையே உங்க அண்ணான்தான்."

"இந்தா பாரு. இந்தப் பேச்ச இங்க வச்சக்காத. ஒங்க கோலவடிவு மட்டும் யோக்கியமா..? ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா..?"

"எம்மா. ஒனக்கு கோடி கும்பிடு. ஏற்கனவே நொந்து போயிருக்கேன். ஆள விடு."

"அதெப்டி ஒங்க இஷ்டத்துக்கு எங்க அண்ணாவ பேசணும். நாங்க சும்மா கேட்டுக்கிட்டு இருக்கணுமா..?"

“என்ன ரோசாப்பூ. நமக்காவ பீடி சுத்துறதையே விட்டுக் கொடுத்தவள். நம்ம வாடாப்பூ. அவள்கிட்ட போய். சண்டைக்குப் போகலாமா..? அப்புறம் ஒன் பேச்சியம்மாவுக்கு என்ன ஆச்சாம்.?”

"எங்க குடும்பத்த கெடுக்கிறதுக்குனே வந்தவள் அவள். காலையில அலங்காரி தலையில மண்ணள்ளிப் போட்டாளா. இப்போ ஊரு முழுக்க போலீஸா பயந்து போய் எங்கேயோ ஒடிட்டாள். அய்போ போலீஸ். அய்யோ போலிஸ்ன்னு சத்தம் கேட்டுது. அப்புறம் பார்த்தா ஆளக் காணும். அருணாசலம் சின்னய்யா. அழுதுட்டு கிடக்காரு. அவருக்கும் வெளில வர பயம். சந்திரா குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு கிழக்குப் பக்கமா போனாள். நான் மேற்குப் பக்கமா வாரேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/264&oldid=1243837" இலிருந்து மீள்விக்கப்பட்டது