பக்கம்:சாமியாடிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

25

சாமியாடிகள் 25

தடவை வேணுமுன்னா சொல்லுறேன். நல்லா கேட்டுக்க. இந்த கோலவடிவு."

"எக்கா. எக்கா எழுந்திரு. இவன ரெண்டுல ஒண்ணு பாத்துடனும். நீ இப்போ எழுந்திருக்காட்டால், இந்த துளசிங்கம் சொன்னதல்லாம் ஒனக்குச் சரின்னு அர்த்தம்."

கோலவடிவு பயந்து போயும், பதறிப் போயும் எழுந்தாள். அத்தனைப் பெண்களும் பரபரப்பானார்கள். சிலர் எழுந்து விட்டார்கள். ஏதோ சொல்லப் போனார்கள். அதற்குள் கோலவடிவின் கையை இழுத்துக்கொண்டு போகப் போன சந்திரா சட்டென்று நின்றாள். கிழக்குத் திசையையே பார்த்தபடி நின்றாள். அவள் பார்த்த திசையை அனைவரும் பார்த்தார்கள். பயந்து பார்த்தார்கள். படபடப்பாய் பார்த்தார்கள். அங்கிருந்து -

திருமலை வந்து கொண்டிருந்தான். தோளிலே மண்வெட்டி கிடந்தது. அதன் இரும்பு வாய் அவன் தோளைப் பற்றிக் கிடக்க, கம்புக் கணை அவன் கையோடு கையாய்த் தொங்கியது. இடது கையில் ஒரு வெட்டரிவாள். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். செம்மண் நிறம். சுட்ட செங்கல் லாவகம் வெட்டரிவாளுக்கும் அவன் கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மண்வெட்டி கணைக்கும் அவன் கைக்கும் வேறுபாடு தோன்றவில்லை. எல்லாப் பெண்களும் நடுங்கினார்கள். முத்தம்மா சந்திராவைக் கெஞ்சினாள்.

"ஏய் சந்திரா. நீ நல்லா இருப்ப. கோலவடிவு அண்ணாச்சி கிட்ட சொல்லாத விளையாட்டு விளையாட்டாவே இருக்கட்டும். வினையாயிடப்படாது. இல்லன்னா குத்துப்பழி வெட்டுப்பழி வரும்.கோலவடிவு. நீயாவது இந்த குறுமுட்ட பொண்ணுகிட்ட சொல்லு."

கோலவடிவும் சந்திராவைச் சமாதானம் செய்யப்போனாள். ஆனால் அதற்குள் சந்திரா முந்திக் கொண்டாள். கைகளை ஆட்டி ஆட்டி காட்டுக் கத்தலாய் கத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/27&oldid=1243302" இலிருந்து மீள்விக்கப்பட்டது