பக்கம்:சாமியாடிகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

273

சாமியாடிகள் 273

"பின்ன ஒன் வீட்ல குலாவுறதுக்கா வந்தோம்.? என்ன பேச்சு பேசிட்டே. பெரியம்மா. இந்த ரஞ்சிதம் பய மவள், ஒரு போலிஸ் அதிகாரிகிட்ட கோலவடிவைக் காணல. கடத்திட்டுப் போன துளசிங்கம் மட்டும் திரியுறான். அவள் எங்க இருக்கான்னு தெரியணு முன்னு so மனு எழுதி கொடுத்துட்டாளாம். போலிஸ் பாடு கொஞ்சம் திண்டாட்டம். அவங்க நம்ம கோழியத்தான் சாப்புடுறாக. ஆனாலும் கொஞ்சம் பயப்படுறானுவ அதனால கோலவடிவ கூட்டிட்டுப் போயி கடலமாடன் கோவிலுலயே துளசிங்கத்திற்குக் கட்டி வைக்கப் போறோம். தாலிகூட வாங்கியாச்சு."

"எங்க சித்தி லேசுப்பட்டவள் இல்ல பாட்டி. பகையாளி மகள் கோலவடிவு. எங்க கோவிலுல துளசிங்கம் தாலிகட்ட, தலை குனிஞ்சு இருக்கும்போது, கரும்பட்டையான் கூட்டம் எப்படித் துடிப்பாங்கன்னு கண்ணால பார்க்கப் போறோம்."

"கோலவடிவு கழுத்துல தாலி ஏறுறது, பெரிய மனுஷன்னு தன்னை நினைச்சுட்டு இருக்கிற பழனிச்சாமிய. செருப்பால அடிக்கறது மாதிரி. சரி. சரி. கோலவடிவக் கூப்பிடு பாட்டி.."

"உடமஸ்த்தன எங்கேடா?"

"துளசிங்கத்தைக் கேட்கியா..? இந்த ஊருக்குள்ள போலிஸோட வராண்டாமுன்னு. இந்த வெட்டாம்பட்டி எல்லையில போலிஸோட நிக்கான். கார் காத்து நிற்குது. கோலவடிவும் அவனும் கார்ல பருத்திக்காடு பக்கம் போவாங்க. அங்க மேளதாளம் தயாராய் இருக்கும். அப்புறம் கரும்பட்டையான் பயலுவ தூக்குப் போடும்படி மேளதாளத்தோட கடலைமாடனை சந்திப்பாங்க. கோலத்த கூப்பிடு பாட்டி"

"கூப்புடவும் மாட்டேன். அவள அனுப்பவும் மாட்டேன். துளசிங்கம் அவன் அய்யா. பழனிச்சாமி விட்ல இருந்து யாராவது ஒருத்தன்.

எல்லாருமா இங்க வரணும். இந்த வீட்லயே தாலி கட்டணும். அது வரைக்கும் அவள் இங்கதான் இருப்பாள்."

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/275&oldid=1243870" இலிருந்து மீள்விக்கப்பட்டது