பக்கம்:சாமியாடிகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

சு. சமுத்திரம்

27.4 சு. சமுத்திரம்

"பெரியம்மா கிட்ட என்னடா பேச்சு. நாம உள்ள போயி கோலவடிப் பார்த்து ஒரு சொடக்கு விட்டால் அவள் வந்துட்டுப் போறாள்."

அலங்காரி, பகவதி பாட்டியைப் பற்றி கவலைப்படாமல், மச்சான் மகன் தர்மராசாவுடனும், கொழுந்தன் ரத்தினத்துடனும் பெரிய வீட்டுக்குள் போனாள். லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள். கோலவடிவைக் காணோம். பின்கதவு திறந்திருந்தது. அதன் வழியாக கொல்லைப்புறம் போனால் அங்கேயும் காணோம்.

அந்த வீட்டின் கோட்டைச்சுவர் பக்கம் உள்ள பப்பாளி மரம் பாதி ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது.

33

அலங்காரி, துடித்துப் போனாள்.

புறக்கடை வழியாக அலறியடித்து முன் பக்கம் வந்தாள். மச்சான் மகன் தர்மராசா கையையும், மச்சினன் ரத்தினத்தின் கையையும் கைக்கு ஒன்றாகப் பிடித்தபடியே பதறியடித்துப் புலம்பினாள்.

"கோலவடிவ காணுமே. கானுமே."

உடனே, அந்த செம்பட்டையான்கள் இருவரும், வீட்டுக்குள் போய், அலங்காரி பார்த்த இடத்தையெல்லாம் பார்த்தார்கள். அலங்காரி குரல் கொடுத்தாள்.

"பப்பாளி மரம் பாதில. ஒடிஞ்சிருக்கதப் பார்த்தா. கோலவடிவு அந்த மரத்தைப் பிடிச்சு சுவரில ஏறி அந்த பக்கமா குதிச்சிருப்பான்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/276&oldid=1244085" இலிருந்து மீள்விக்கப்பட்டது