பக்கம்:சாமியாடிகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

275

சாமியாடிகள் 275

நெனக்கேன். நல்லாப் பாருங்க. பாவி. மொட்ட கெடுத்துட்டாளே. ரஞ்சிதம் பாவி விடமாட்டாளே."

அவர்கள் இருவரும் சுவரில் ஏறி, பேட்டரி விளக்குப் போட்டு, அதை அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தார்கள். பிறகு உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள். பகவதி பாட்டி புலம்பினாள்.

"ஏய் அலங்காரி குடி கெடுப்பா. ஒனக்கு வர வேண்டிய நிலம அவளுக்கு வந்துட்டே இந்நேரம் நீ விழவேண்டிய கிணத்துல அவள் விழுந்திருப்பாளே. ஒரு சின்னஞ்சிறிச. கொன்னுட்டியடி பாவி. அவள ஒரு பொண்ணு மாதிரி நெனச்சா பேகன. நாயப் பேசுறது மாதிரி பேசுன. அப்போ துளசிங்கம் பய பேசுனதையும் இப்போ நீங்க பேசுனதையும் கேட்டுட்டு அவள் சாவுறதுக்காக ஒடிட்டாள். ஆத்துலயோ, கிணத்துலயோ உயிரவிட ஒடிட்டாள். நான் என்ன செய்வேன். கையும் ஒட மாட்டங்கு. காலும் ஒட மாட்டேங்கே. எப்பாவு. சிவனுபாண்டி. எப்பாவு"

வீட்டில் கிழக்குச் சுவர் பக்கமாக போய் நின்று பகவதி பாட்டி கத்தினாள். பழனிச்சாமியின் சித்தி மகன் சிவனுப்பாண்டி பெண்டு பிள்ளைகளோடு சுவர்ப் பக்கமாக வந்து தலையை நீட்டினான்.

"எப்பாவு. கோலவடிவு அங்க வந்தாளா? எங்கேயோ போயிட்டாளே."

"வந்தபோது சொல்லணுமுன்னு தோணல. போன பிறவா சொல்லுதே. கோலவடிவ வெட்டிக் கொன்னியளா? எரிச்சுச் கொன்னியளா? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும். ஒன்னையுைம் சேர்த்து போலீஸ்ல ஒப்படைக்கேன் பாரு..."

"நான் என்னப்பாவு செய்வேன். இந்த மூளி அலங்காரி செய்த வேல. பாதகத்தி. நானாழா. ஒனக்கு கிடச்சேன். வாழப்போற பெண்ணை நாசமாக்கி மிதிச்சிட்டியளா. பாவி. மொட்டுப்பூவ. பறிச்சி. எறிஞ்சிட்டியேழா. சண்டாளி."

"ஒனக்கும் எனக்கும் பேச்சில்ல. பெரியம்மா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/277&oldid=1244086" இலிருந்து மீள்விக்கப்பட்டது