பக்கம்:சாமியாடிகள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

சு. சமுத்திரம்

276 சு. சமுத்திரம்

"அப்படின்னா. என் வீட்டுக்குள்ள எமுழா வந்த மரியாதி கெட்டவளே. மேனாமினுக்கி. கையேயி. நீலி. என் கடைசி காலத்த நிம்மதி இல்லாம பண்ணிட்டியே."

"இனிமே ஒன் வீட்டுப் படி ஏறுனால் சொல்லு.”

ஒ (9. லு

பகவதி பாட்டி, அங்குமிங்குமாய், அலைபாய்ந்து புலம்பினாள். சிவனுப் பாண்டியனை, அவன் மனைவி சட்டையைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்தாள். இந்தச் சமயத்தில் பகவதிப் பாட்டி சொன்னதுதான் சாக்கு என்று அலங்காரி முகத்தை உப்பிக் கொண்டு செம்பட்டையான்களுடன் வெளியேறினாள். அவளால் பேச முடியவில்லை... 'ஒரு வேளை கோலவடிவு தற்கொலை செய்திருப்பாளோ.. எனக்கென்ன. இதுக்குல்லாம் காரணம் துளசிங்கந்தான். எலி டாக்டர் மவன். அந்த இரப்பாளிப் பயல்தான்:

அலங்காரியின் மெய்க்காப்பாளர்கள் போல் இருவரும் இருபக்கமும் நடக்க, அவள் இந்த இருட்டு வழியில் நடந்தாள். பேட்டரியை அடிக்கப் போன தர்மராசாவின் கையைப் பிடித்துத் தடுத்தபடியே இருட்டாகி நடந்தாள். சற்றுத் தொலைவில் தெரிந்த கார் வெளிச்சத்தை இலக்காக்கி, நடக்கும் தரையைப் பாதையாக அனுமானித்து அந்த மூவரும் நடந்தார்கள்.

அந்தக் காரை அவர்கள் நெருங்கியதும் துளசிங்கம்கூட கேட்க வில்லை. கான்ஸ்டபிள்கள் சகிதமாக நின்ற சப்-இன்ஸ்பெக்டர்தான் கேட்டார்.

"கோலவடிவு வரலியா..? ஒங்களத்தான் அலங்காரியம்மா. ஏன் வரல?”

"ஒடிட்டா ஸாரே. ஒடிட்டா. ஒடுகாலி. அந்த வீட்ட விட்டு எவனோடயோ ஒடிட்டா..."

"என்ன சித்தி நல்லா பாத்தியா..."

"நல்லாவே பார்த்துட்டேன். ஒடியே போயிட்டாள். கடைசில அவள் கரும்பட்டையான் புத்தியக் காட்டிட்டா. இப்போ என்ன செய்யலாம் லாரே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/278&oldid=1244087" இலிருந்து மீள்விக்கப்பட்டது