பக்கம்:சாமியாடிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சு. சமுத்திரம்

26 சு. சமுத்திரம்

"எண்ணே. எண்ணே. சீக்கிரமா வா. இந்த துளசிங்கம் எங்கள அவமானமாய் பேசுறான். சீக்கிரமா வாண்ணா."

திருமலை வேகவேகமாய் ஒடி வந்தான். துளசிங்கமும் அவனைச் சந்திக்க தயாராய் இருப்பதுபோல், கைகளை மார்பில் மடித்துப் போட்டு, வீறாப்பாய் நின்றான். பெண்களோ, எய்யோ.. எய்யோ என்று புலம்பினார்கள். அந்தப் புலம்பல் திருமலைக்கும் அந்த இடத்திற்கும் இடைவெளி குறையக் குறைய வலுத்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய், ஆலமரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் அஞ்சிப் பறந்தன. அவை எழுந்த வேகத்தில் அந்த ஆலமரத்தின் உச்சிக் கொம்புகள் ஆட்டம் கண்டதுபோல் ஆடின. திருமலையும் நெருங்கிவிட்டான். துளசிங்கமும் தயாராகிவிட்டான்.

வேகமாக நடந்து வந்த திருமலை அந்தப் பெண்களின் கூச்சலாலும், சந்திராவின் கைவீச்சு பலமாக ஓங்கியதாலும், ஒட்டமாக வந்தான். மூச்சிழுப்பைக் கட்டுப்படுத்துவது போலவும், அதை வெளிக்காட்டாதது போலவும், ஆல விழுதைப் பிடித்தபடி, பிறகு அதன் நுனியைக் கையில் சுருட்டி வைத்தபடி, எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தான். எதிரே கையைக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி, அலட்சியமாய் நிற்பதாய்க் காட்டிக் கொண்ட துளசிங்கத்திடம் குசலம் விசாரிக்கப் போனான்.

அப்போது

சந்திரா, பெரியப்பா மகனைப் பார்த்து, நடந்ததைச் சொல்லப் போனாள். கோலவடிவு அங்கே நிற்கப் பிடிக்காததுபோல், சற்றுத் தனியாய்ப் போய்நின்று கொண்டாள். அவசர அவசரமாகச் சொல்லப்போன சந்திராவின் கையை ஒருத்தி பிடித்தபடியே, "ஏதோ கோபம். பாவம். பழி. ஒரு கொலயோ, ரெண்டு கொலயோ விழுறதுக்கு பொறுப்பாளி ஆலாத" என்றாள். உடனே சந்திராவுக்கு ஒரு சந்தேகம். தான் சொல்லப் போவதோ, அல்லது கிரகித்துக் கொண்டதோ தப்பாக இருக்கலாம் என்ற நினைப்பு. ஆகையால் அவள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதுபோல் உதட்டைக் கடித்தபோது சஸ்பென்ஸ் தாங்கமுடியாத திருமலை அவளை அதட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/28&oldid=1243303" இலிருந்து மீள்விக்கப்பட்டது