பக்கம்:சாமியாடிகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

281

சாமியாடிகள் 281

"அலங்காரி, எனக்கென்னமோ. கோலவடிவு அவளோட வீட்டுக்கோ. சொந்தக்காரங்க. வீட்டுக்கோ வந்திருக்கலாமுன்னு ஒரு சந்தேகம். யாரையாவது ஆட்கள அனுப்பி பார்க்கச் சொல்லேன்."

"எல்லா அதிகாரத்தையும் கையில வச்சுக்கிட்டா இப்டிச் பேசுறது.? போலீஸ் அனுப்பி பழனிச்சாமி விட்ட சோதனை போடுங்க. இல்லன்னா. எந்த வீட்டுக்குப் போனாலும் பெரிய மனுஷத்தனம் இல்லன்னு நினைக்கிற பழனிச்சாமிய போலீஸ் அனுப்பி கையோட கூட்டி வரச்சொல்லி கோலவடிவ எங்கேடா கடத்திட்டு போனேன்னு ரெண்டு தட்டுத் தட்டுங்க.."

"அலங்காரி. நீ நெசமாகவே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாய் ஆயிருக்கணும்."

"அப்படின்னா ஸாரே..?"

"ஒண்ணுமில்ல. விடியட்டும். பழனிச்சாமிய இங்க கூட்டிவந்து ஒன் கண்ணு முன்னாலயே. விசாரிக்கேன் பாரு..."

34

கோலவடிவு, அலங்கோல வடிவாய் நடந்தாள்.

இரவோடு இரவாக, பகவதிப் பாட்டி வீட்டின் தெற்குச் சுவரில் ஏறி, கீழே குதித்தாள், ஒரு எருக்குழியில் விழுந்தாள். சண்டும், சருகும், சாணமுமாக அந்த இடத்தின் குமிழி போன்ற குழியில் பொத்தென்று விழுந்தாள். அங்கிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வு அற்றுப் போனவளாய், கால்மணியோ-அரைமணி நேரமோ அங்கேயே குப்புற ஒரு பள்ளத்தில் உருண்டு கிடந்தாள். ஏதோ பெரிய இரை கிடைத்த சாக்கில், அங்கே வந்த தெரு நாய்கள், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/283&oldid=1244098" இலிருந்து மீள்விக்கப்பட்டது