பக்கம்:சாமியாடிகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

சு. சமுத்திரம்

284 சு. சமுத்திரம்

எந்த அர்த்த ராத்திரியில் ஐவராசாவும், அலங்காரியும், தனது அண்ணன் திருமலை, காவல் நிலையத்தில் கட்டுண்டு கிடப்பதைச் சொன்னார்களோ - அப்போது எழுந்தாள். எப்போது பழனிச்சாமியை இளக்காரமாய் பேசினார்களோ - அப்போது என்னடா நெனச்சே என்னடா நெனச்சே என்று பாயப் போனாள். எப்போது தன்னைக் காட்சிப் பொருளாக்கி, தான் பிறந்த கரும்பட்டையான் குடும்பத்தை சிறுமைப்படுத்த திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தாளோ - அப்போதே குமைந்தாள். கல்யாணம் என்ற பெயரில். தனது உற்றார்க்கும், பெற்றார்க்கும் கருமாந்திரம் வைக்கப் போகிறார்கள் என்பதை எப்போது தெரிந்தாளோ. அப்போது தெளிந்தாள். அப்பா விவகாரி. ஒடிப்போன பல பெண்களைக்கூட, குடும்பப் பெண்களாக்கியவர். நடந்த விவரத்தை அப்படியே அவரிடம் சொன்னால். அவர் நிச்சயம் அனுதாபப்படுவார். ஒருத்தனுடன் ஒடியது சாதாரண துணிவு என்றால், அவனை, தாய் தந்தையருக்காக உதறிவிட்டு திரும்புவது அசாதாரண துணிவு என்று தந்தை நினைப்பார் என்று அவள் நினைத்தாள். துளசிங்கம், ஐவராசா, அலங்காளி வகையறாக்கள், தன் குடும்பத்தை படுத்திய பாட்டில் பெருமிதப் பட்டபோது, அவள் தனது மனதுக்குள்ளேயே, அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தாள்.

அவர்கள் எந்தக் கையில் தன்னை ஒரு கருவியாக வைத்திருக்கிறார்களோ- அந்தக் கையையே உடைக்கும் கருவியாக தான் மாறியே ஆகவேண்டும் என்று கருவிக்கொண்டாள். சட்டாம்பட்டிக்கும், வெட்டாம்பட்டிக்கும் இடைப்பட்ட வழியில் மட்டும் சிறிது தடுமாறி, பகவதி பாட்டி வீட்டுக்கு வந்ததும் பழைய கோலவடிவாய் தான் ஆகிவிட்டது, தனது பெற்றோருக்கு புரியும் என்று நினைத்தாள். ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது, அவரும் தம்மீது அந்த அளவு அன்பு செலுத்துவதாக நினைப்பதுபோல், பெற்றோருக்காக அவள் அனுதாபப்பட்டதால், பெற்றோரும் அனுதாபப் படுவார்கள் என்று நினைத்தாள். பெற்றோரின் கெளரவத்தை தூக்கிப் பிடித்து இப்போது நடக்கும் இந்த நடை ஒரு வீர நடை என்று வீம்புடன் நடந்தாள். வேண்டப்பட்டவர்களைப் பற்றி தீவிரமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/286&oldid=1244103" இலிருந்து மீள்விக்கப்பட்டது