பக்கம்:சாமியாடிகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

சு. சமுத்திரம்

288 சு. சமுத்திரம்

"எங்க வகையறாதான். ஒங்களுக்குப் பயந்து எங்கேயோ போயிட்டாள். என்ன விஷயம்?"

"இவங்க மூணுபேரையும் எங்கய்யா கையோட கூட்டிட்டு வரச்சொன்னாரு..."

"ஒங்கையான்னா..."

"விளையாடுறியளா. சப்-இன்ஸ்பெக்டர்தான். சுடலமாடன் கோவிலுல பந்தோபஸ்த பார்த்துட்டு இருக்கார். அங்க வரச் சொன்னார்."

"என்ன விஷயமாம்?"

“எது பேசணுமுன்னாலும் அவருகிட்ட வந்து பேசுங்க."

"வரமுடியாதுன்னு சொல்லுங்க.."

“விஷயம் லேசுல்ல. இப்பவே பாத்துடுங்க... இல்லன்னா எங்கய்யாவுக்கு கண்மண் தெரியாம கோபம் வரும்."

"அட போய்யா. எங்களால வரமுடியாதுன்னா வரமுடியாது. என்ன செய்யணுமுன்னாலும் செய்யலாமுன்னு ஒங்கய்யாகிட்ட சொல்லிபுடு"

அந்த கான்ஸ்டபிள் சிறிது யோசித்தார். அந்த வீட்டில் நிலவிய அவல நிலை அவரையும் ஆட்டுவித்தது. சப்-இன்ஸ்பெக்டர் செய்வது அதிகப்படி என்று புரிந்தது. அவர் நாம் சொன்னால் கேட்பாரா. துளசிங்கம் - அலங்காரி தானே இப்போ அவருக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள்.

அந்த போலீஸ்காரர் போய்க் கொண்டிருக்கும் போதே, அருணாசலம் கத்தினார்.

"கொடுமைக்கு ஒரு அளவு வேண்டாம்.? நம்மளப் போய் சுடல மாடன் கோவிலுக்கு கூப்புடனுமுன்னா எவ்வளவு திமுறு இருக்கனும்? அவமானப் படுத்துறதுக்கும் அளவு இல்லாமப் போயிட்டுப் பாரு. இந்த பேச்சியம்மாவ வேற காணல. ஏடா. நாராயணா. திருமலை எப்டிடா இருக்கான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/290&oldid=1244112" இலிருந்து மீள்விக்கப்பட்டது