பக்கம்:சாமியாடிகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

சு. சமுத்திரம்

290 சு. சமுத்திரம்

"ஏய்யா யோசிக்கே. நீ கூப்பிட்டதுக்கு வராதது குற்றம். ஒரு மகளப் பெத்தது குற்றம். அவள அருமையா வளத்தது குற்றம். அவள் ஒடிப்போனதும் என்னோட குற்றம். அவள துளசிங்கம் கூட்டிட்டுப் போனதும் என் குற்றம். அலங்காரி என்றவள் ரெண்டு பேரையும் செட்டப் பண்ணுனதும் என் குற்றம். இதோ வெளில மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிக்காளே. பாக்கியம் இவளும் குற்றவாளிதான். எல்லா குற்றத்துக்கும் சேர்த்து ரெண்டு பேருக்கும் விலங்கு மாட்டு. பாக்கியம் வாடி. ஒனக்கும் கோடி புண்ணியம். எங்க ரெண்டு கையையும் ஒண்ணா சேர்த்து விலங்கு போடு. இப்போ படற அவமானத்தைவிட ஒன்னால் படப்போற அவமானம் பெரிசாயிடாது."

சப்-இன்ஸ்பெக்டர் யோசித்தார். இந்த ஆசாமி இப்படிக் கத்துறார் என்றால் ஏதாவது பேக்ரவுண்ட் இருக்கும். இவன் மாமனோ மகனோ தாலுகா ஆபீஸ்ல இருப்பான். விஷயத்த இதோட விடமாட்டான். ஆர்.டி.ஓ. என்குயரி வரும். ஆனால், புகார் கொடுத்தவன் துளசிங்கமாச்சே ஒப்புக்காவது ஏதாவது செய்யனுமே.

"நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா. பெரியவரே."

"நீ எங்கய்யா என்னை பெரியவன்னு நெனச்சே என் வயசுல முக்கால் வயசுகூட ஒனக்கு இல்ல. எடுத்த எடுப்புலயே ஏடா ஒடான்னு பேசுறே. ஒன்னை மாதிரி நானும் விவகாரிதாய்யா. நாலு ஊர்ல வழக்குப் பேசி முடிச்சு வச்சவன்தாய்யா நான். இந்த ஊருல இந்தத் தெருவுல ரெண்டு வம்சங்க. ரெண்டுக்கும் ஏடாகோடமான போட்டி இந்த ஊருக்குப் பொறுப்பு வகிக்கிற ஒனக்கு மொதல்ல இது தெரிஞ்சிருக்கணும். இப்படிப்பட்ட நிலையில ஒரு குடும்பத்து பொண்ணு எதிரிக் குடும்பத்துப் பயலோட ஒடிப்போறது வெறும் காதல் விவகாரமா மட்டும் ஆகாது. அதுல பெண்ணப் பெத்தவன் குடும்பத்தோட மானமும், ஆணப் பெத்தவன் குடும்பத்தோட ஆணவமும் அடங்கியிருக்கு.

நீ சப்-இன்ஸ்பெக்டர். என்ன செய்திருக்கணும். இப்போ வந்து நிக்கியே. இந்த இடத்துக்கு வரணும். ரெண்டு குடும்பத்துக் காரணுவளயும் ஊர்ப் பெரியவங்களையும் கூட்டணும். அப்புறம் உருட்டு மிரட்டு. இது ஒன் வேலை. ஒருத்தன் எதையோ சொன்னான்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/292&oldid=1244120" இலிருந்து மீள்விக்கப்பட்டது