பக்கம்:சாமியாடிகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

சு. சமுத்திரம்

2.94 சு. சமுத்திரம்

அப்பா. விட்டில்பூச்சியான என்னை வீட்டுக்குள்ள சேரும்பா. அம்மா. என் அம்மா. நீ இப்படி ஆவேன்னு தெரியமுன்னா. நான் ஏழெழு ஜென்மத்துக்கும் இப்டிப் பண்ண மாட்டேம்மா.. அண்ணன இரும்பால பூட்டிட்டு. நான் கழுத்துல தாலிய. பூட்டிக்கதுக்கு. நான். அரக்கி இல்லம்மா..!

கோலவடிவு பேசுவதாகத்தான் நினைத்தாள். எல்லோரும் கம்மா நிற்கிறாவளே. கேட்டதுக்கு அடையாளக் கோபம்கூட வர்லயே. ஒகோ எனக்கு நானேதான் பேசிக்கிட்டேனோ? என்னால பேச முடியலியோ. பேச முடியலியோ? நாக்கு சுத்தமாட்டங்கே. குரல் வரமாட்டங்கே."

தாய்க்காரி பாக்கியம் லேசாகக் கண் விழித்தாள். ஏதோ பேசப் போன வாயில், கண்ணில் உற்பத்தியான நீர் சங்கமமானது. அவளின் இரண்டு கைகளும், ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டன. பின்னர், காலாடாமல் கையாடாமல் வாய் மட்டும் துடிக்க அப்படியே கிடந்தாள். தாயம்மா அவள் முகத்தில் தண்ணிர் தெளித்தாள். வாடாப்பூ முந்தானையால் விசிறி விட்டாள். சந்திரா, கோலவடிவைத் திட்டினாள்.

எல்லோரும் பழனிச்சாமியை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

பழனிச்சாமி, அந்த சாய்வு நாற்காலியை சாய்ப்பவர் போல் எழுந்தார். சிறிது தொலைவில், முடங்கிக் கிடந்த கோலவடிவைப் பார்த்து, தலையை இரு. இரு. என்பது போல் ஆட்டியபடியே, வீட்டுக்குள் போனார். அவர் போனதும், வீட்டுக்குள் டமார் என்று சத்தம் கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோ என்று உள்ளே பார்த்தபோது, பழனிச்சாமி கையில் ஒரு டிரங்க் பெட்டியோடு வெளியே வந்தார். பாசிபூத்த பழைய பெட்டி, பூட்டோடு கூடிய - நாட்டுப் பெட்டி.

பழனிச்சாமி, அந்தப் பெட்டியுடன் மகளை நோக்கிப் போனார். கோலவடிவு, இப்போது தரையில் கிடந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து, அவர் காலைத் தொடப் போனாள். லேசாகத் தொட்டு விட்டாள். உடனே அவர், அந்தக் கைவிரல்களை ஐந்து தலை நல்ல பாம்பாக நினைத்தவர் போல், தனது கால்கள் அவள் கையில் சிக்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/296&oldid=1244156" இலிருந்து மீள்விக்கப்பட்டது