பக்கம்:சாமியாடிகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

295

சாமியாடிகள் 295

இருக்க, துள்ளிக் குதித்தார். பிறகு அவளைப் பார்த்து, வழக்கில் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவளைப் பார்த்து, எப்படிப் பேசுவாரோ-அதே ஆணித்தரமான குரலில், விருப்புவெறுப்பற்ற வேதாந்த முறையில் பேசினார்.

"எழுந்திரு. இந்த பெட்டியில் ஒன் துணிகள் நகைகள் நட்டு எல்லாம் இருக்குது. இதை. நான் ஒனக்கு ஆசையோடு தரல. ஒன் ஞாபகம் வரப்படாதுன்னுதான் எல்லாத் துணியையும் அள்ளிப் போட்டுத் தாறேன். எழுந்திரு. நான் ஒன்னை பெத்தவன் பாரு. அதனால நானே. ஒன்னை அந்தப் பயல் வீட்ல கொண்டு விடுறேன். ബT...”

கோலவடிவு, எல்லாவற்றையும் அங்கே வருவதற்கான அவசியம் உட்பட அனைத்தையும் அவரிடம் சொல்லப் போனாள். வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஏதோ அரைகுறையாகப் பேசப் போனவளை, பழனிச்சாமி, மடக்கிப் பேசினார்.

"நீ எதுவும் பேச வேண்டியதில்ல. பேசி ஆக வேண்டியதுமில்ல. மரியாதியா எழுந்திரு. டேய் நாராயணா. நீயும் இவளுக்கு அண்ணாச்சேடா, செல்லாம வளர்த்த செல்லத் தங்கச்சிய, புருஷன் வீட்ல கொண்டு விடவேண்டாமா? ரகசியமா ஒடுண்வளை பகிரங்கமாய் கொண்டுவிட வேண்டியது நம்மோட கடமையாச்சேடா. எந்திரிங்கடா. நமக்கு நல்ல பேர் வாங்கித் தந்தவளை கொண்டு விட்டுட்டு வரலாம். ஒருத்தி. புருஷன் வீட்டுக்குப் போகும்போது தலை குனியனும். பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் தலை நிமிரணும். இது இந்த வீட்ல தலைகீழா போயிட்டேன்னு பாக்கியாடா. பரவாயில்ல. எழுந்திருடா. ஏய். என் செல்ல மகளே. என்ன அலங்கோலமாக்குன கோலமவளே. எழுந்திரும்மா. எழுந்திருழா.

எழுந்திரு நாயே..."

நாராயணன் இருந்த இடத்திலேயே ஏறெடுத்துப் பாராமல் கிடந்தான். திண்ணையில் இப்போது மல்லாந்து கிடந்த அம்மா பாக்கியம், கைகளைத் தூக்கி தூக்கி ஆட்டினாள். என்ன சொல்ல நினைத்தாளோ ஏது செய்யத் துடித்தாளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/297&oldid=1244157" இலிருந்து மீள்விக்கப்பட்டது