பக்கம்:சாமியாடிகள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

305


ரஞ்சிதம் கோலவடிவின் கையைப் பிடித்து லேசாய் இழுத்தாள். தன்னிடம் எதிர்ப்புக் காட்டாமலே இணைந்து கொண்ட கோலவடிவை, முதுகில் தட்டியபடியே, ரஞ்சிதம் வீட்டைப் பார்த்து நடந்தாள். கோலவடிவையும் நடத்திக் கொண்டே போனாள்.

வீட்டுக்கு வெளியே, அம்மாவின் பாராவோடு வந்து துளசிங்கம் அவர்கள் இருவரும் இணைந்து நடப்பதைப் பார்த்துவிட்டு, பல்லைக் கடித்தான். இந்த ரஞ்சிதம் ஊர்ல. இருந்தால்தானே இந்தக் கோலவடிவும் இருக்க முடியும்.



38

வீட்டிற்குள் இருத்தி வைக்கப்பட்ட இடத்தில் அப்படியே பித்துப் பிடித்தவள் போல் விழித்த கோல வடிவின் தலைமுடியைச் சரிசெய்தபடியே ரஞ்சிதம் ஆறுதல் சொன்னாள்.

"கண் கலங்காத கோலம். ஒரு ஆம்புளத்துண இல்லாமலும் ஒரு பொண்ணால வாழமுடியுமுன்னு காட்டு. பெத்தவங்க மத்த வங்கள ஆயிட்டால், மத்தவங்களே நமக்கு பெத்தவங்கன்னு மனச தேத்திக்கணும். நீ ஒன் ஆயுள்வரைக்கும் என் வீட்லயே இருக்கலாம். நம்மள எப்போ வேண்டான்னு சொல்லுதாங்களோ அப்பவே நாமும் அவங்கள வேண்டாங்கணும். இப்போ எதுவும் குடிமுழுகிடல. பேசாம கொஞ்ச நேரம் தூங்கு. நான் அதுக்குள்ள சோறு பொங்கிடுறேன்."

ரஞ்சிதம், ஒரு பாயை விரித்து, கோலவடிவைக் குழந்தையை சாய்ப்பதுபோல் சாய்த்து, பிறகு அவள் தலையைத் தூக்கி, ஒரு தலையணையை வைத்தாள். பாவம் எப்போ சாப்பிட்டாளோ. இவள் சாப்பிட்டவள் இல்ல. சாப்பிடப்பட்டவள்.

ரஞ்சிதம் அடுப்படி வேலையில் இறங்கி அரைமணி

நேரமாகியிருக்கும். கோலவடிவு, மல்லாந்து படுத்தபடி, அந்த வீட்டின் ஒலைக்கூரையை, பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/307&oldid=1244199" இலிருந்து மீள்விக்கப்பட்டது