பக்கம்:சாமியாடிகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

சு. சமுத்திரம்

திடீரென்று ஒரு விக்கி வண்டிச் சத்தத்தின் பின்னணிக் கூச்சலில் துளசிங்கத்தின் போர்ச்சத்தம் கேட்டது. "ஏடி. ரஞ்சிதம். வாடி வெளில."

ரஞ்சிதம் வெளியே வந்தாள். விக்கியின் இரண்டு பக்கமும் இரண்டு கால்களை போட்டபடி துளசிங்கம் கர்ஜித்தான்.

“மரியாதியா. அந்த ஒடுகாலி நாய. வெளில துரத்தப் போறியா இல்லியா? ஆற அமர இவள என் தலையில கட்டலாமுன்னு பாக்கியா? ஒன்னாதாமுழா., ஏய் ரஞ்சிதம். ஒத்த வீட்டு நாயே... ஒனக்கு. என் தலதானா கிடச்சது? அதுதான் நடக்காது. பேசாம, அவள் அப்பன் வீட்டப் பார்த்து அடிச்சு விரட்டல, மரியாதி போயிடும். எவன் கூடவோ ஒடிப் போயிட்டு என்கிட்ட வரப் பாக்கிற எச்சிக்கல நாயி இவள். என் விஷயத்துல ஏமுழா தலையிடுறே.”

"வயகப் பொண்ண காதலிக்கது மாதிரி காதலிச்சுட்டு. அப்புறம் அடிச்சு விரட்டுறது சொந்த விஷயமுல்ல துளசிங்கம்."

"அவள மயக்குனது மாதிரி ஒன்னயும் மயக்கனுமா..?"

"நீ அனாவசியமாய் பயப்படுற துளசிங்கம். இவள் ஒங்க வம்புக்கே வரமாட்டாள். நீ சம்மதிச்சாலும் ஒன்னைக் கட்டிக்க இவள் சம்மதிக்கமாட்டாள். தயவு செய்து இனுமயாவது அவள விட்டு வை."

"ஒன் சாலக்கு எனக்குத் தெரியாதா. இந்த ஊருக்கு எமனே நீதான். இன்னைக்குள்ள இவளை நீ விட்ட விட்டுத் துரத்தல. அப்புறம். ஒனக்கு வீடே இருக்காது. ராத்திரியோட ராத்திரியா ஒன்னையும். கொன்னு வீட்டையும் எரிச்சுப்புடுவேன் எரிச்சு..."

இதற்குள் சத்தம் கேட்டு பிள்ளைமார்குடி பெண்களும், ஆண்களும் கூடி விட்டார்கள். ஏற்கெனவே ரஞ்சிதத்தைப் பிடிக்காதவர்கள். அதோடு சொன்னபடி செய்யும் துளசிங்கம் வைக்கும் நெருப்பு. ரஞ்சிதத்தின் வீட்டோடு மட்டும் நிற்காது. ஆகையால் ரஞ்சிதத்தை ஆளுக்கு ஆள் திட்டினார்கள். துளசிங்கத்திற்குத் தாங்கள் வேண்டப்பட்டவர்கள் என்று காட்டினார்கள்.

"ஏய் ரஞ்சிதம். வேலில போற ஒனான. எடுத்து ஏன் தாழில போடுறே.? ஒன்னால எங்களுக்கெல்லாம் கெட்ட பேரு. நீ இருக்கதுவரைக்கும் நாங்க நிம்மதியாய் இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/308&oldid=1244198" இலிருந்து மீள்விக்கப்பட்டது