பக்கம்:சாமியாடிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

37

சாமியாடிகள் 37

"அப்போ என் பையன் ஒத்தக் கையி பிசகி கிடக்கானே.” "பிசகுன கைய ஒடிச்சிடும். சரியாப் போயிடும்."

"ஆளப் பாரும். ஆமா.. மாமா. ஒம்மா கல்யாணத்துலயாவது சட்டை போட்டுட்டுப் போனtரா."

துளசிங்கம் முதலாவதாகவும், திருமலை இரண்டாவதாகவும் காஞ்சானைக் கிண்டல் செய்ததைக் கேட்ட ரஞ்சிதம் கருத்துத் தெரிவித்தாள்.

"இனிமேல் நீங்க ரெண்டுபேரும் இப்டித்தான் பொதுக் காரியத்துல ஒண்ணா நிக்கணும். தாயம்மாவுக்கு அவருகிட்ட ஏதாவது வாங்கிக் கொடுங்க... இனிமேலாவது சண்டையை விடுங்க. சரி அவரு கிட்ட வசூலிச்சு..."

காஞ்சான் வசூல் பேச்சை மாற்ற நினைத்துப் பேசினார். "ஏன். இவனுகளுக்குள்ள என்ன ஆச்சு."

ரஞ்சிதம் எவ்வளவோ, கண்ணடித்துப் பார்த்தும், வாடாப்பூ கேட்கவில்லை. காஞ்சானிடம், நடந்ததை அப்படியே ஒப்பித்தாள். தாயம்மாவுக்கு நஷ்டஈடு கொடுக்கும்படி சொன்ன அலங்காரி மீது கோபப்பட காஞ்சான், சும்மாக் கிடந்த சங்கை, ஊதிக் கெடுத்தார். பேச்சை திசை திருப்பியதுமாச்சு அலங்காரிக்கு பதிலடி கொடுத்தது போலவும் ஆச்சு.

"எம்மா. அலங்காரி. எங்க செம்பட்டையான் குடும்பமும். இவங்க கரும்பட்டையான் குடும்பமும் தாயா பிள்ளியா இருக்கது. ஒனக்குப் பி டி க்க லியா ஒ ன் சோ லிக் கழுதய பாத் துட்டு இருக்க வேண்டியதுதான. ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாத தாயி. சரி. நான் வாறேன். என் மவனுக்கு ஒத்தக் கையி..."

அலங்காரியின் முகம் சுண்டியது. மனதுக்குள் படிந்த நிழல் கண்ணுக்குள் இருளானது. கையில் இருந்த பீடி இலையை, கோபங் கோபமாய் கிழித்துப் போட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/39&oldid=1243316" இலிருந்து மீள்விக்கப்பட்டது