பக்கம்:சாமியாடிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



3

அந்த வீடு வெளியே பார்ப்பதற்கு அப்பாவி மாதிரி தெரிந்தாலும் உள்ளே அசகாயகுரத்தனமாய் இருக்கும். இரண்டு பக்கமும் வியாபித்த வெளித் திண்ணைகளைத் தாண்டி வாசலைத் தாண்டிப் போனால் பெரிய முற்றம். ஒரு பக்கம் சைக்கிள்களும் மோட்டார் பைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒடுங்கிய ஒரு பாதை வழியாகச் சென்று ஒரு கதவை இழுத்தாலோ திறந்தாலோ இன்னொரு மிகப்பெரிய ஒட்டுக் கொட்டகை அதில் பத்து பதினைந்து பால் மாடுகள். அவற்றில் நான்கு ஜெர்சிகள். கொட்டகைக்கு அருகே சாண எரிவாயு கிடங்கு. அவற்றைப் பயன்படுத்தி மின்னும் மங்கலான மின்விளக்குகள்.

பழனிச்சாமி, வீட்டின் விசாலமான வராண்டாவில் ஒரு தேக்குக் கட்டிலில் எந்தப் புராண நூலையோ படித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி பாக்கியம், அவருக்கு எதிரே தரையில் உட்காந்து, எதையோ புடைத்துக் கொண்டிருந்தாள். வெளியே இருந்து சந்திராவும், கோலவடிவும் வந்து உள்ளறைக்குள் போனார்கள். சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்து முற்றத்தில் ஒரு பாயைப் போட்டு அமர்ந்தார்கள். சந்திரா, சுவரில் சாய்ந்தபடியே பீடி சுற்றும் கலையைக் கோலவடிவிற்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். பழுப்பு இலய. எடுக்கப்படாது. வெட்டும்போது கத்தரிய ஆட்டப்படாது. சுருட்டும்போது. அடி பெரிசாயும். நுனி சிறிதாயும் இருக்கணும்அப்டில்ல. இப்டி.

மத்தியான வேளை.

வைரப்பட்ட உடம்பில் 'தங்கப்பட்ட கழுத்தைச் சாய்த்து வைத்த பழனிச்சாமி, கட்டிலின் பக்கம் போனார். அறுபது வயதுக்காரர். அடாவடியில்லாத பார்வை. வயிறும் மார்பும் ஒரே மாதிரி இருந்தன. பற்கள் தடித்திருந்தாலும், வெள்ளை வெள்ளையாக மின்னின. அணில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/40&oldid=1243332" இலிருந்து மீள்விக்கப்பட்டது