பக்கம்:சாமியாடிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

39

சாமியாடிகள் 39

வால் மாதிரியான லேசாய் வெள்ளைப்பட்ட கறுப்பு மீசை. மாநிற மேனி. உருண்டு திரண்ட கண்கள். மொத்தத்தில், அவரைப் பார்த்தால், ஒரு பயபக்தி ஏற்படும்.

திடீரென்று நான்கைந்து பேர் திபுதிபு என்று வந்தார்கள். ஒருவர் மட்டும் கட்டிலில் உட்கார்ந்தார். இன்னொருவர் அதில் உட்காரப் போனார், பிறகு என்ன நினைத்தாரோ, அந்தக் கட்டிலுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார். எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த குள்ளக் கத்தரிக்காய் ராமசாமி பீடிகையோடு பேசினார்.

"இந்தச் சின்னப்பய மக்கள் சின்னத்தனமாய் போயிட்டாங்க. வரவர மட்டு மரியாதி இல்லாமப் போச்சு."

"மட்டு மரியாதி இல்லாட்டா போட்டும். பெரியவிய சொல்லுறதக் கேட்கனுமுல்லா"

"மட்டு மரியாதி இருந்தா தானே. பெரியவய சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும் என்கிற நெனப்பு வரும்."

பழனிச்சாமி, அவர்களிடம் வாய்விட்டுக் கேட்காமல் கண் விட்டுப் பார்த்தார். குள்ளக் கத்திரிக்காய் ராமசாமி, காளை மாடு வாலை ஆட்டுவது மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்.

நம் ம காளியம் ம ன் கோ வி ல யும் , பேச் சி யம் ம ன் கோயிலாக்கனுமுன்னு பாக்காங்க. பக்கிப் பயலுவ..."

கட்டிலில் இருந்த பழனிச்சாமியின் சின்னம்மா மகன் அருணாசலம், ராமசாமியை விரட்டினார்.

"வெத்திலயத் துப்பிட்டு. விளக்கமாச் சொல்லேமில. மாடு புல்லை சுவைக்கது மாதிரி வெத்திலய இப்டியா திங்கது. ஆதியோட அந்தமாச் சொல்லு.”

"சொல்லுதேன். பழனிச்சாமி அண்ணாச்சி. கோபப்படாமக் கேக்கணும். நம்ம குடும்பத்துச் சின்னப்பய மொவனுவ, இந்த ஆடில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/41&oldid=1243318" இலிருந்து மீள்விக்கப்பட்டது