பக்கம்:சாமியாடிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சு. சமுத்திரம்

40 சு. சமுத்திரம்

காளியாத்தாவுக்கு அம்மன் கொடை கொடுக்கயில.. டெக்குல சினிமா. நான் சொல்லல. சின்னப்பய மவனுவதான் டெக்குல சினிமாப் படம் போடணுமுன்னு சொல்லுதாங்க. நாம பரம்பரை பரம்பரையாய் அம்மனை பயபக்தியோட கும்புடுறவங்கடா. வீடியோ சினிமா வேண்டவே வேண்டான்னு சொன்னேன். கேக்க மாட்டேன்னு ஒத்தக் காலுலயே நிக்காங்க.. காலம் கலிகாலமாப் போச்சு"

பழனிச்சாமி, நிமிர்ந்து உட்கார்ந்தார். கட்டிலில் இருந்து எழுந்து முற்றத்திற்குப் போய் ஒரு ஒரமாய் காறித் துப்பிட்டுக் கட்டிலுக்கு வந்தார். நிதானமாகக் கேட்டார்.

"அப்புறம் என்ன கேட்டாங்க. ரிக்கார்ட் டான்ஸ்.... கேட்டிருப்பாங்களே. வில்லுலயும், பொம்புள வில்லு வேணுமுன்னு சொல்லியிருப்பாங்களே. எவளாவது சினிமா நடிகை கோவில் கொடியை ஏத்தி வைக்கணுமுன்னும் சொல்லியிருப்பாங்களே."

"அண்ணாச்சி நேரில கேட்டது மாதிரியே சொல்றியளே. அப்படியும் கேட்டாங்கதான்."

பழனிச்சாமி மனைவி பாக்கியம், முறத்தைக் கீழே வைத்துவிட்டு, ராமசாமியைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள்.

"ஏய் கொழுந்தா. ஒங்க அண்ணாச்சி குணம் தெரிஞ்சும் நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற பாரு. அவிய இழுத்து இழுத்து கேட்கிறதுல இருந்தே ஒன்னை எடக்கு மடக்கில சிக்க வைக்கது தெரியல..."

"நீ செத்தே சும்மா இரு பாக்கியம். டேய் ராமசாமி. எந்த செறுக்கி மகன்ல. இப்படிக் கேட்டது.? போகிற போக்கைப் பார்த்தால் அம்மனையே வீடியோ படத்துல நடிக்கச் சொல்லுவாங்க போலுக்கு. நீ அவனுவளுக்கு என்ன பதில் சொன்ன..."

"ஒங்களக் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்." "எல்லாமே என்னக் கேட்டுத்தான் செய்யுறியோ. இவளும் நம்ம பொம்பளப் பிள்ளியளும் இல்லாட்டா ஒன்ன நல்லாக் கேட்பேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/42&oldid=1243319" இலிருந்து மீள்விக்கப்பட்டது