பக்கம்:சாமியாடிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சு. சமுத்திரம்

42 சு. சமுத்திரம்

"அய்யோ அண்ணாச்சி. நாங்களும் ஒங்கள மாதிரி பழைய காலத்து ஆட்கள்ாச்சே, நெனச்சிகூட பார்ப்போமா. சின்னப்பய மவனுவதான்."

இதற்குள் பாக்கியம், கிண்ணம், தாலா, தட்டு ஆகியவற்றில் மொச்சைக் கொட்டையையும் ஏழலைக் கிழங்குத் துண்டுகளையும் கொண்டு வந்து, ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தபடியே, அபிப்ராயம் சொன்னாள்.

“எந்தப் பய என்ன சொன்னான்னு திட்டவட்டமாச் சொல்லு. ஒங்க அண்ணாச்சி திட்டம் பண்ணிக்குவாரு..."

"வேற யாரு. இந்தச் சின்னப்பய மவனுக்குத் தலைவரே. நம்ம திருமலைதான்.”

மோட்டார் பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த திருமலை, வேஸ்ட் துணியைப் பார்க்கிற சாக்கில் தந்தையைப் பார்த்தான். அவர் மனைவியிடம் பதில் சொன்னார்.

"இந்தா பாக்கியம். அவன்கிட்டே கோவில் பேரேட்ட கொடுத்துடு. டான்ஸோ, சினிமாவோ எது வேணுமுன்னாலும் போட்டுக்கட்டும். தலை இருக்கிற இடத்துக்கு அவனுக்கு கழுத்து வந்துட்டு. அதனால இனிமே என் தல, கழுத்து இருக்கிற இடத்துக்குப் போய் குனியணும். எடுத்தா பிள்ள. கோவில் கணக்கு வழக்கு பேரேட்ட."

திருமலை, மோட்டார் பைக் சக்கரத்திற்குள் முகத்தை மறைத்துக் கொண்டே முனங்கிப் பேசினான்.

"நான் ஒண்ணும் அப்டிப் பேசல. சின்னய்யாகிட்ட அப்டி ஒரு அபிப்ராயம் இருக்குதுன்னுதான் சொன்னேன். அதுவே என் அபிப்பிராயமுன்னு சொன்னனா. எய்யா ஒம்ம ஆசைக்கி என்ன மாட்ட வைக்கியரு."

இதற்குள் சந்திராவின் தந்தை அருணாசலமும், அம்மா பேச்சியும் அங்கே வந்து, முற்றத்தில் நின்றார்கள். பிறகு, சந்திரா, கோலவடிவு உட்கார்ந்திருந்த பாயில், அப்பாக்காரர் உட்கார்ந்து இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/44&oldid=1243321" இலிருந்து மீள்விக்கப்பட்டது