பக்கம்:சாமியாடிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

43

சாமியாடிகள் 43

அம்மாக்காரி உள்ளே போனாள். மகன் திருமலை, இன்னும் தன்னை மீறிப் போகவில்லை என்பதை மனசுக்குள் ரசித்துக் கொண்ட பழனிச்சாமி, இன்னொன்றைக் கேட்டார்.

"ஆலமரத்துப் பக்கம் ஒனக்கும் துளசிங்கத்துக்கும் ஏதோ தகராறுன்னு காஞ்சான் சொன்னாரு. என்ன விஷயம்."

"சொல்லும்படியா ஒண்ணுமில்ல. சும்மா விளையாட்டுக்கு பேசிக்கிட்டு இருந்தோம்."

ஒரு பீடியை உருட்டி, தூளைத் திணித்து, குச்சியால், அடைத்து விட்டு, அதை நூலில் எப்படிக் கட்ட வேண்டும் என்று கோலவடிவுக்கு மீண்டும் சொல்லிக் கொடுக்கப்போன சந்திரா, அந்த பீடியைக் கீழே போட்டாள். பீடித்தட்டை காலால் உதைத்துக் கீழே தள்ளியபடியே, வராண்டாவிற்கு எதிரே நின்றபடி இதமாகவோ, மிதமாகவோ பேசாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட குரலில் சொன்னாள்.

"அண்ணா. பொய் சொல்லுதான். பெரியப்பா. கரும்பட்டையான் குடும்பத்து அலங்காரி, நம்ம கோலவடிவு துளசிங்கம் பயலோட கதாநாயகியாய் நடிக்கனுமுன்னு இளப்பமாய் சொல்லுதா. துளசிங்கம் என்னடான்னா கோலவடிவு தமிழ்க்கு தமிழ் கதாநாயகியாவும், இந்திக்கு இந்திக்காரியாகவும் இருக்கான்னு வீம்புக்குச் சொல்லு தான். இவன்கிட்ட நான் எல்லாத்தையும் சொன்னால், திருமலை அண்ணன் துள்ளுறது மாதிரி துள்ளிட்டு எவளோ. ஒரு மூதேவி பேச்சக்கேட்டு, இடிச்ச புளி மாதிரி நிக்கான்."

பழனிச்சாமியின் தம்பியும், சந்திராவின் தந்தையுமான அருணாசலத்திற்குக் கரும்பட்டையான் குடும்ப ரத்தம் கொதித்தது. அண்ணன் மகனைச் சாடினார்.

"நீயல்லாம் எதுக்குல இந்த உடம்ப வச்சுக்கிட்டு இருக்கணும்.? நம்ம பொண்ண செறுக்கி மவன் சினிமாக்காரியா நெனச்சி பேசியிருக்கான். நீ பாட்டுக்கு வந்துட்ட பாரு. நீ கரும்பட்டையான்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/45&oldid=1243322" இலிருந்து மீள்விக்கப்பட்டது