பக்கம்:சாமியாடிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சு. சமுத்திரம்

44 சு. சமுத்திரம்

சொல்லிக்கதுக்கு வெட்கப்படனும். ஒன்னை என் அண்ணாச்சி மகன்னு சொல்றதுக்கு நான் வெட்கப்படனும்."

அங்கே இருந்தால், இன்னும் ஏதாவத பேச வேண்டியதுவரும் என்றும், அதைத் தவிர்க்க நினைத்தவர் போலவும், அருணாசலம், வீட்டுக்கு வெளியே வந்தார். அந்தச் சமயம் பார்த்து, அந்த வீட்டுக்கு அருகே ஒடிய வண்டிப்பாதை வழியாய் போன அலங்காளியைப் பார்த்து விட்டார். அவளை இதமாக வரவழைத்து, பலமாக திட்டித் தீர்ப்பது என்று தீர்மானித்தார்.

"ஏழா. அலங்காரி. கொஞ்சம். இங்க வா."

அலங்காரி மாராப்புச் சேலையை இழுத்து மூடி, இடுப்பில் இருந்து முழங்கால் வரை புடவையைத் தட்டி விட்டபடி சாதாரணமாக வந்தாள். வாசல் படிக்கட்டில் நின்ற அருணாச்சலம், அவள் நெருங்க நெருங்க, தனது பற்களை நெருக்கிக் கடித்தார். ஆசாமிக்கு நாற்பது வயதிருக்கும். அவர் உடம்பில், ரத்தத்திற்கு பதிலாக சாராயமே ஒடவேண்டும். நரிக்குறவர் மாதிரி உறுதியான தோற்றம். குத்திட்ட மீசை. மதுரையில் ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் போட்டு, எப்படியோ சாராயப் பழக்கத்தை அவரிடமிருந்து பிரித்து மூன்று மாசமாகிறது. ஆனால் நேற்றில் இருந்தே லேசான குடி ஆசை. இன்றைக்கோ அதுவே பலமாகிவிட்டது. அந்த ஆசையை நிறைவேற்றினால் எல்லோரும் நாயே பேயே என்று பேசுவார்கள் என்பது தெரிந்து வெறும் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இப்போதோ அலங்காரி கிடைத்து விட்டாள்.

அருணாசலத்தின் குணாதிசயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர் மனைவி பேச்சியம்மா, ஆசாமியை நோட்டம் போடுவதற்காக விடுவிடுவென்று வாசல் படிக்கு வந்து, அவரது தார்ப்பாய்ச்சிய வேட்டியைப் பிடித்து உள்ளே இழுத்தாள். வெளியே அவர் அலங்காளியை ஏடாகோடமாகப் பேசிவிடக்கூடாது என்பதைவிட, இந்த அலங்காளியைத் தானே விரட்ட வேண்டும் என்ற எண்ணம். இவளும், அலங்காரியும் ஒரே தாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பழைய பகை ஒன்று கணக்கு முடிக்கப்படாமல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/46&oldid=1243323" இலிருந்து மீள்விக்கப்பட்டது