பக்கம்:சாமியாடிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சு. சமுத்திரம்

48 சு. சமுத்திரம்

"கடவுளே. கடவுளே. இவ்வளவு பேச்சையும் கேட்கணுமுன்னு ஆண்டவன் விதிச்சுட்டானே. இனிமேல் நான் இருந்ததுலயும் சேத்தி இல்ல. செத்ததுலயும் சேத்தி இல்ல. அய்யோ.. அம்மோ.. என்னமா கேக்குறாள். அடைக்கலமுன்னு வந்தவளை இப்டிப் பேசிட்டாளே. இவ்வளத்தையும் கேட்டுட்டு நான் உயிரோட இருக்கணுமா."

அழுகைச் சத்தம் கேட்டு, கோலவடிவும், சந்திராவும் ஒடி வந்தார்கள். அப்படியும் பேச்சி, வசவை விடவில்லை.

கோலவடிவு, அலங்காரியையே பரிதாபமாகப் பார்த்தாள். அவளிடம் பேசப் போன சந்திராவை ஒரு இடி இடித்து தள்ளிவிட்டு, அழுகிறவளை, அழப்போகிறவள்போல் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்ட சந்திராவிற்கே பாவமாக இருந்தது. அம்மாவைத் திட்டப் போனாள். இதற்குள் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்த பழனிச்சாமியும், மற்றவர்களும், அவள் அழுகைச் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே தாவினார்கள். இரண்டே இரண்டு நிமிடத்தில் நடந்து முடிந்த இந்த வசவு அவர்கள் காதுகளை மெய்யாகவே எட்டவில்லை. பழனிச்சாமி பதறியடித்துக் கேட்டார்.

"என்ன அலங்காரி. திடுதிப்புன்னு இப்டி அழுவுறே.? கோலவடிவால் பொறுக்க முடியவில்லை.

"எப்பா. அலங்காரி அத்தையை நம்ம சித்தி அசிங்கம் அசிங்கமாப் பேசிட்டா. அதுவும் அளவுக்கு மேல, அவன்கூட இவன் கூடன்னு பேருகளச் சொல்லிச் சொல்லி."

"ஏழா கோலவடிவு. நல்லதுக்குக் காலமில்ல. என்கிறது சரியாத்தான் இருக்குது. நான் மச்சான் மகளை சினிமாக்காரின்னு பேசிட்டாளேன்னு வயித் தெரிச்சலை பேகனால். நீ அவளுக்காக

வக்காலத்து வாங்குறே. ஏழா. சந்திரா. எழுந்திரு. பாவி மனுசா. இன்னுமா ஒமக்கு இந்த ஊட்ல வேலை.

பேச்சியம்மா கணக்குத் தீர்ந்த திருப்தியுடனும், அதேசமயம், சொந்தக்காரியான கோலவடிவிடம், புதிய கணக்கைத் திறந்த அதிருப்தியுடனும், சந்திரா சகிதமாய்ப் போய்விட்டாள். அந்தப் பாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/50&oldid=1243327" இலிருந்து மீள்விக்கப்பட்டது