பக்கம்:சாமியாடிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சு. சமுத்திரம்

S{} சு. சமுத்திரம்

தொடப்பட்டு, நீராகி விழுவது போலிருந்தது. அவள்பட்ட அவமானத்தை நினைத்து நினைத்து மருகுகிறாள். பாவம். அலங்காளி. அவள் மனசு எப்படித் துடிக்குதோ. எப்படித் தவிக்குதோ. பேச்சியம்மா சித்தி சொன்னதை யார் கிட்டயும் சொல்லி ஆறுதல் தேட முடியாது.

கோலவடிவு சுற்றும் முற்றும் பார்த்தாள். திருமலை சாப்பிட உட்கார்ந்தான். அப்பா சொந்தக்காரர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு எட்டு நடந்து, அலங்காரி அத்தைக்கு ஆறுதல் சொன்னால் என்ன... அதனால் அவள் மனசு திருப்திப்படுதோ. இல்லியோ என் மனக திருப்திப்படும். படுதோ.. படலியோ. அலங்காளி அத்தை கண்ணைத் துடைச்சு அதுவழியா நெஞ்சைத் துடைக்கணும்.'

கோலவடிவு மெல்ல எழுந்து, வீட்டுக்கு வெளியே வந்து, வேகமாய் நடந்தாள். அலங்காரியைச் சீக்கிரம் பார்க்க வேண்டும். என்பதற்காகக் குறுக்கு வழியான ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தாள்.

அலங்காரியின் அழுகையை நிறுத்தினால்தான், தனது அழுகை நிற்கும் போல் தோன்றியது. திக்கற்று ஒருத்தி புலம்பும்போது, நான்கு திக்குகளுமே திசையறியாது புலம்புவதுபோல் தோற்றம் காட்டுகிறது. மானுடம், நரைபட்டு போனது போல் காட்டுகிறது.

கோலவடிவுக்கு, இந்த மாதிரியான சிந்தனை, அவள் புத்தித் தகுதிக்கு ஏற்ப, இதே தாக்கத்தில் வேறுவிதமாய் உட்புகுந்தது.

"இல்லாதவன் பெண்டாட்டி. எல்லாருக்கும் அண்ணிதான். அழுகிறவள் அலங்காரி அத்தை அல்ல. புருஷன் பலம் இல்லாத. சொத்துபத்து இல்லாத அத்த. பொம்புளயோட அழுகை. இவங்க அழுகை நிக்காட்டால் ஊரு சிரிக்க முடியாது. உறவுக்கு அர்த்தம் கிடையாது. பாவம் அத்தே."

கோலவடிவு, ஞானவடிவாய் நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/52&oldid=1243329" இலிருந்து மீள்விக்கப்பட்டது