பக்கம்:சாமியாடிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சு. சமுத்திரம்

56 சு. சமுத்திரம்

இப்பிடி. ஆறுதல் சொல்லுறதுக்காகவே இந்த அத்தய எல்லாரும்

திட்டனும் போல தோணுது."

"வேண்டாம் அத்த. நீங்க தூக்குப் போட்டுச் சாவியளோ இல்ல.

கிணத்துல விழுந்து உயிர மாப்பியளோன்னு பயந்து வந்தேன்."

"இந்தக் கிணத்துல விழணுமுன்னுதான் வந்தேன். நீ மட்டும் வராவிட்டால் விழுந்திருப்பேன்."

"அப்படில்லாம் செய்திடாதிய அத்த, பாவம். துளசிங்கம் மச்சான் சாதாரணமா பேகனதுக்கு எங்கண்ணாச்சி நல்லா திட்டிட்டான். அவரு கிட்டயும் என்னைத் தப்பா நினைக்கப்படாதுன்னு சொல்லிடுங்க. அத்தே. அப்போ நான் போறேன். அத்தே."

"ஏன் இப்டிப் பயப்படுறே. அத்தக்கிட்ட நிற்கிறதுக்குப் பயமா." "ஆயிரந்தான் இருந்தாலும் இப்போதைக்கு நீங்க எங்க குடும்பத்துக்கு சண்டைக்காரி. ஒங்ககிட்ட பேச வந்தது தெரிஞ்சா எங்கண்ணாச்சி என்னை வெட்டிப் போட்டுடுவான். அதுக்காவ எங்கப்பா அண்ணாச்சிய அடிக்கப் போவாரு-அவரு, வெட்டுறதுக்கு அண்ணாச்சி என் உடம்புல இடம் வைக்கிலியேன்னு."

"பரவாயில்லியே. நல்ல பேசுறியே."

"சரி. நான் வாறேன். அத்த."

கோலவடிவு எழுந்தாள். அவளை வழியனுப்புவதற்காக அலங்காரியும், எழுந்தாள். அப்படி எழும்போது துளசிங்கம் வடக்குப் பக்கமாக உள்ள பனங்காட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அலங்காரி மனத்தில் ஒரு பழியுணர்வு. ஆனாலும் மனசு கேட்கவில்லை. பேச்சியம்மா திட்டும்போது, எதிர்ப்பது மாதிரி பேசியவள், ஒரு பாவமும் அறியாத அப்பாவி. இப்போ நான் கலங்குறதைப் பாத்துட்டு கலங்குறவள். இந்த பச்ச மழலையப் போய். ஏன் கூடாது. படுகளத்துல ஒப்பாரி கூடாது. அதோட. இவளை. நான் ஒண்னு கிடக்க ஒண்னு பண்ணல. துளசிங்கம் கூட சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/58&oldid=1243337" இலிருந்து மீள்விக்கப்பட்டது