பக்கம்:சாமியாடிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சு. சமுத்திரம்

62 க. சமுத்திரம்

இவளோட சித்தப்பா பொண்டாட்டி பேச்சியம்மா என்னை அவன் கிட்டே போனே. இவன்கிட்டே போனேன்னு கண்டபடி திட்டிட்டா..."

"ஒனக்கு மூள இருக்குதா சித்தி. ஒரு வார்த்த எனக்கு சொல்லி அனுப்ப வேண்டியதுதான? அவள் கொண்டைய தலையில் இருந்து எடுத்திருக்க மாட்டேன்."

"நீயுல்லாம் இப்படி முரடனாய் இருந்து எப்படித்தான் குப்பு கொட்டப் போறியோ. மனுஷனுக்கு பொறுமை வேணுண்டா. எப்பவுமே. சொல்லுறதப் ஒருத்தர் பதட்டப்படாமல் முழுசா கேட்டுட்டு அப்புறமாத்தான் பதில் சொல்லணும். பாதி கேட்ட உடனே பதில் சொல்லுறது அரை கிணறு தாண்டுறது மாதிரி. பேச்சியம்மா பேகன ஏச்சுல நான் ஆத்துல விழலாமா. குளத்துல விழலாமான்னு அழுதுகிட்டே வந்து இங்கே உட்கார்ந்தேன். என் ராசாத்தி எனக்கு ஆறுதல் சொல்றதுக்காவ இங்கே ஒடி வந்தாள். எவள்டா இப்டி வருவாள். பாலைப் பாக்கதா. பால் காய்ச்ச பானையப் பாக்கதா. என் ராசாத்தி. ஒனக்காவ. நானும், இவனும் எவ்வளவு அவமானத்த வேணுமுன்னாலும் தாங்கிப்போம்."

அலங்காரி கோலவடிவைக் கட்டிப்பிடித்து நான்கைந்து தடவை முத்தமிட்டாள். பிறகு "எண்டா நான் அவளை கொஞ்சுறத நீ பார்க்கே. அவளை நான் முத்தமிட்டா ஒனக்கென்னடா" என்றாள் குறும்பாக.

"நான் வாறேன். அத்த. வாறேன்." "மச்சான்னு சொல்லு. இல்லாட்டா துளசிங்கமுன்னு சொல்லு." "துளசிங்கம் மச்சான்னு சொல்லுவாள்." கோலவடிவு எதும் பேசாமல் நின்ற இடத்துலயே நின்றாள். அலங்காரி கோலத்தின் தலையை வருடிவிட்டபடியே சொன்னாள்.

"அத்தையும் ஒன் கூடவே வாறேன். ஒரு நிமிஷம் நில்லு. இதோ வந்துட்டேன்."

அலங்காரி எங்கேயோ ஒதுங்கப் போவதுபோல் போனாள். கோலவடிவும் துளசிங்கமும் தனித்து நின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/64&oldid=1243488" இலிருந்து மீள்விக்கப்பட்டது