பக்கம்:சாமியாடிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





5

அலங்காளியின் வீடு நிசமாகவே சின்ன வீடுதான். அதேசமயம் செட்டான வீடு. கிழக்குப் பக்கம் ஊராட்சி ஒன்றிய காண்டிராக்டர் ஒருவரின் இரண்டு மாடிக் கட்டிடச் சுவரே இவள் வீட்டுக்கு அரண் மாதிரி. தெற்குப் பக்கத்தில் பாதியளவு சமையல்கட்டும், மீதியில் மாட்டுத் தொழுவமும். மேற்குப் பக்கம் இவளே ஒரு காம்பவுண்ட் சுவரை ஆளுயரத்திற்குக் கட்டிவிட்டாள். எலி வளை மாதிரி வெளியே தெரிந்தாலும், உள்ளே போகப் போக உறுதியாக இருக்கும் விசாலமான வீடு. அந்த வீட்டுக்குள் எலி வளைவுக்குள் வருவது மாதிரிதான் ஒடுசலான வாசல் வழியாய் வரவேண்டும். இதர வீடுகளைப் போல் இல்லாமல், அந்தத் தெருக் கதவும் சாத்தப்பட்டே இருக்கும்.

அலங்காரி குளிப்பாட்டிய தலைமுடியைக் கோதிவிட்டபடியே, துளசிங்கத்தைப் பார்த்துக் கண்சிமிட்டியபடியே கேட்டாள்.

"கோலவடிவ என்னடா பண்ணுனே. அப்டி தலைதெறிக்க ஒடுறாள்."

"சனியனுக்கு ரம்பன்னு நெனப்பு. பேச வாயெடுக்கதுக்கு முன்னாலயே ஒடிட்டாள். நான் பாம்பாயிலயும், மெட்ராஸ்லயும் பாக்காத பொண்ணுவளா. தொட்டா. தொட்டவன் கை கறுப்பா இருந்தாலும் சிவக்கும். அப்டி சிவப்பு பொணனுங்கள ஆயிரக் கணக்குல பாத்தாச்சு."

"ஒரு தாயி கிட்ட பேசுற பேச்சாடா இது. நான் ஒன் அப்பா கூடப் பிறந்த சித்தப்பாவோட பொண்டாட்டிடா. பெத்த தாய்க்குச் சமமானவடா.”

துளசிங்கம் அந்த தார்சாவில் நாற்காலியில் உட்கார்ந்து, பனை மரத்து துணைப் பிடித்தபடியே, உள்ளே பனை நார்க்கட்டிலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த சித்தப்பா சீமைச்சாமியையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/65&oldid=1243500" இலிருந்து மீள்விக்கப்பட்டது