பக்கம்:சாமியாடிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சு. சமுத்திரம்

64 சு. சமுத்திரம்

பார்த்தான். நோஞ்சான் உடம்பு. குச்சிக் கால். குச்சிக் கை. அலங்காரிச் சித்தியின் ஒரு காலளவுக்கு அவர் உடம்பு, அவரையே பார்த்த துளசிங்கம் சித்தியைக் கூர்மையாகப் பார்த்தான். அவள் மீது கோபமும் வந்தது. கூடவே பரிதாபமும் வந்தது. கூர்மைப் பார்வையை விலக்கி, லேசாய் சிரித்தான். அவளும் அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டவள் போல், அவன் கண்களைத் தவிர்த்து முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள். தாய்க்காரி, எந்த மகனுக்கும் எவளையும் பிடித்துக் கொடுக்க மாட்டாள். கண்டிப்பாளே தவிர, காதல் பாதை வகுக்கமாட்டாள். அதற்கு அலங்காரி சித்தி மாதிரி பல அனுபவங்களும், அலங்கோலங்களும் தேவை.

அலங்காரி முழுசும் நனைந்த தைரியசாலியானாலும், அந்தச் சமயத்தில் துளசிங்கத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. முகத்தை அவன் பக்கமாய் திருப்பாமலே விளக்கமளித்தாள்.

"நம்ம தோட்டத்துப் பக்கமா சட்டம் பேசுற ரஞ்சிதம் வந்துகிட்டு இருக்காள். அதப் பார்த்துட்டுத்தான் கோலவடிவு ஒடியிருப்பாள். அவள விட்டுப் பிடிச்சா சரியாகிவிடும்.”

"அவளை விட்டும் பிடிக்காண்டாம். விடாமலும் பிடிக்காண்டாம். சரி நான் வரட்டுமா..."

'வந்ததும் வராததுமா புறப்படுறே. கோலவடிவைப் பத்தி சித்திக்கிட்ட கேட்க வந்தியோன்னு நினைச்சேன்." -

"நீ வேற. இந்தச் சித்தி முகத்த ஒரு நாளைக்கு பாக்காட்டால் எனக்கு என்னமோ மாதிரி இருக்கும். இன்னைக்கு சிமெண்டுக்கு தனிக்கடை போடுறேன். ஒன் தரிசனம் இல்லாம போட்டா நல்லா இருக்குமா..."

"நீயாவது இந்த சித்திக்கிட்ட பெத்த பிள்ளை மாதிரி நடக்கியப்பா. அதுவும் பெத்த மவளே போன பிறவு."

"நான் எப்பவும் ஒன்கிட்ட நல்லாத்தான் இருப்பேன் சித்தி. பம்பாயிலயும் சென்னையிலயும் பல எக்ஸ்டிரா பெண்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/66&oldid=1243492" இலிருந்து மீள்விக்கப்பட்டது