பக்கம்:சாமியாடிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

65

சாமியாடிகள் 65

பார்த்தவன் நான். நான் ஒண்னும் அதை பெரிசா எடுத்துக்கிறது இல்ல. இப்டி எப்படியோ இருந்த பல பெண்ணுங்க. இப்போ தங்கள மாத்திக்கிட்டு பேரும் புகழுமா இருக்காளுவ அதனால நாமும் நம்மள மாத்திக்கிடணும்."

அலங்காரி வாயடைத்து நின்றபோது, கதவு தட்டப்பட்டது. துளசிங்கம் கதவைத் திறப்பதற்காக நடக்கப்போனான். அவள் அவன் கையைப் பிடித்துத் தடுத்த படியே உள்ளே முகம் நோக்கி கத்தினாள்.

"ஒம்மத்தான் யோவ். தூங்குமூஞ்சி. பண்டாரம். என் பிள்ள நிக்கான். இல்லன்னா நல்லா கேட்பேன். எந்திரும். யாரோ வாசல் கதவ தட்டுறது காதுல விழல. துப்புக்கெட்ட மனுஷன். எழுந்துருமே."

அந்தத் தட்டுக்கெட்ட மனுஷன் எழுந்திருக்கவில்லை. உடனே அலங்காரி ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். சீமைச்சாமி முகத்தில் விழுந்த நீர் மூக்குக்குள் போக, அலறியடித்து எழுந்தார். அலங்காரி, அவர் முதுகைப் பிடித்து, வெளிக்கதவின் திசை நோக்கித் தள்ளினாள். அவரும், அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தால், அவள் ஆணையை நிறை வேற்ற நேரமாகும் என்று நினைத்தவர்போல் வேட்டியைக் கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டே ஓடினார். கதவைத் திறக்கும்போது மட்டும் வேட்டிச் சுருக்கத்தை இடது கையில் பிடித்துக் கொண்டார்.

உள்ளே வந்த எலி டாக்டர், மகன் துளசிங்கத்தை எதிர்பார்க்க வில்லை. தலைக்கும், கழுத்துக்கும் வித்தியாசம் காணமுடியாத தோற்றம். வேட்டிக் கரையை, இரண்டு கால்களுக்கும் மத்தியில் நெருங்கோடாய் வைத்துக் கொள்வதில் சமர்த்தர். தன்னைத் தானே வாரிக் கொள்ளும் தலைமுடி.

வெளிக்கதவில் இருந்து நூறடி தூரம் நடந்து தார்சாவுக்கு வந்த எலி டாக்டர், சாக்குப் போக்காய் பேசினார்.

"ஒன்ன எங்கெல்லாம் தேடுறதுடா உரக்கடைய வேலக்காரப் பயலுவ கிட்ட விட்டுட்டு வந்தா. கடைதான் உருப்படுமா. நீதான் உருப்படுவியா"

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/67&oldid=1243494" இலிருந்து மீள்விக்கப்பட்டது