பக்கம்:சாமியாடிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சு. சமுத்திரம்

66 சு. சமுத்திரம்

"ஒம்ம சோலிக் கழுதயப் பார்த்துட்டு சும்மா கிடயும். கடையை எப்டிப் பாக்கனுமுன்னு எனக்குத் தெரியும். பெரிசா கடை கொடுத்துட்டவர் மாதிரி பேசுறாரு புத்தி கெட்ட மனுஷங்க. மகன் புதுசா ஒரு கடை திறக்கானேன்னு ஒரு நெனப்பு கிடையாது. கடைப் பக்கம் போவோமுன்னு ஒரு எண்ணம் வர்ல. அப்பாவாம் அப்பா. பெரிய அப்பா."

துளசிங்கம் வேகமாக வெளியேறினான். எதிரே வந்த கோழியைக் காலால் எத்தியபடியே போனான். அலங்காரிக்கு மனம் கோணியது. முகம் கோணியது. அந்தச் சமயம் பார்த்து, வந்த கணவனிடம் கோபத்தைக் காட்டினாள்.

"புத்தி கெட்ட மனுஷா. கதவ ஏன் தாழி மாதிரி திறந்து வச்சுட்டு வாறிரு. நல்லா பூட்டும்."

சீமைச்சாமி இன்னும் வேட்டியைக் கட்டாமலே கதவைத் தாழிட்டுவிட்டு, மனைவி இருந்த பக்கம் ஓடிவந்து, ஈரம்பட்ட முகத்தை, இரண்டு தோள்களிலும் வைத்துத் தேய்த்தபடியே எலி டாக்டர் முகத்துக்கு எதிராக நின்று வேஷ்டியைக் கட்டப் போனார். டாக்டர் கத்தினார்.

"ஒனக்கு மூளை இருக்காடா. முட்டப்பயலே. ஒதுக்குப்புறமா போயி வேட்டிய கட்டேமுல. புத்திகெட்ட பயல..."

"இது புத்தி சரியா இருந்தா நான் ஏன் சீரழியுறேன்." "என்ன அலங்காரி. ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது." "என் பேச்சு எப்பவுமே ஒரு மாதிரிதான். யாரு கதவத் தட்டுறது. யோவ் தட்டுக் கெட்ட மனுஷா கதவத் திறந்துட்டு பூட்டும். அப்டியே தோட்டத்துக்குப் போயி ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்."

"கதவப் பூட்டிட்டு எப்டி வெளில போறது."

"என் தலையெழுத்து எழுதாக்குறைக்கு அழுதா முடியாது. சரி வாரவரு கதவப் பாத்துக்குவாரு. நீரு போயித் தொலையும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/68&oldid=1243495" இலிருந்து மீள்விக்கப்பட்டது