பக்கம்:சாமியாடிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

69

சாமியாடிகள் 69

அலங்காரி இப்போது இரண்டாவது ரகப் பார்வையில் நின்றபடி, காஞ்சானுக்கு ஆணையிட்டாள்.

"மொதல்ல. தெருக்கதவ நல்லா திறந்து வச்சுட்டு வாரும்."

"ஏன் பிள்ள. புதுப் பேச்சு."

"நான் புலி போல நம்பற மனுஷன் எலிபோல ஆகும்போது. நானும் மாறித்தான் ஆகணும். சரி. சரி. கதவத் திறவும். ஒம்ம என் புருஷனோட பெரியப்பா மவன்னுதான் இப்போ பேசுறேன். அதுன்னு நினைச்சுப் பேசல. நீரு கதவைத் திறக்கியரா நான் திறக்கட்டுமா.. கையை விடும்."

"ஒனக்காவ ஆசையோட திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். மெட்ராஸ் போயிருக்கிற இசக்கிப் பயகிட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவ வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்."

"என்னை என்ன தாசின்னு நினைச்சிரா. அப்படி நெனச்சா இப்பவே இடத்தைக் காலி பண்ணும். எங்க அக்கா அதான் ஒம்ம பெண்டாட்டி எப்போ ஒரு காலத்தில் 'காஞ்சானுக்கு என்னைக் கட்டி வச்சிட்டாங்கன்னு பட்டி தொட்டி பதினாறுக்கும் கேட்கும் படியா தமுக்கடிச்சாள்னு கேள்விப்பட்டனோ, அந்த பரிதாபத்துலதான் ஒம்ம மேல ஆச வச்சது.. காசு பணத்த நினைச்சில்ல."

"நான் அப்படிச் சொன்னனா. அந்தச் செறுக்கி எனக்கு கொடுத்த சூட்டுக்கு நீதான் மருந்துன்னு எனக்குத் தெரியாதா..."

"எங்கக்கா சொன்னது சரிதான்னு நினைக்கேன். நீருதான் ஒம்ம புத்தியக் காட்டிட்டியரே. பேசாம போவும். எங்க தாயா பிள்ளையா பழகுதியரோ. அங்க போவும். ஒம்ம ஒட்டும் வேண்டாம். உறவும் வேண்டாம். சரி...சரி. கதவத் திறக்கணும். கைய விடும். வண்ணார் செய்தது தண்ணியோடயாம். இந்த அலங்காரி அன்பும் அப்படித்தான்."

"சரி. இப்போ உள்ளே வா. அப்புறம் விவரமாய் பேசலாம்." "மொதல்ல எல்லாத்தையும் விவரமா பேசியாகணும்."

"விவரமாத்தான் சொல்லித் தொலையேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/71&oldid=1243501" இலிருந்து மீள்விக்கப்பட்டது