பக்கம்:சாமியாடிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சு. சமுத்திரம்

70 சு. சமுத்திரம்

"பச்சப் பிள்ள புரியாது. அந்த ஆலமரத்தடியில என்ன சொன்னிரு...? அதயும் அந்த திருமலைப் பயல் முன்னால. செம்பட்டையான் குடும்பமும், கரும்பட்டையான் குடும்பமும் தாயாப் பிள்ளியா பழகுற குடும்பங்க. ரெண்டு குடும்பத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிடாதன்னு. இந்த வாய்தானே சொல்லிச்சு. இப்போ ஏன். அது இப்டி இளிக்குது."

'பயித்தியாரப் பய மகளா இருக்கியே. நான் எதுக்குச் சொன்னேன்னு யோசித்துப் பாத்தியா. ஒனக்கும், எனக்கும் இஸ்க்கு, தொஸ்க்கு இருக்குமுன்னு ஊரில ஒரு சந்தேகம். அப்டில்லாம் கிடையாது என்கிறத சொல்லாமச் சொல்லுறது மாதிரிதான் நான் அப்டிச் பேசுனேன். வேற அர்த்தத்தில இல்ல."

"ஒமக்கென்ன. கொஞ்சுறதுக்கு ஒரு இடம். குலைக்கிறதுக்கு ஒரு இடம். கடைசியில எனக்குத்தான் யாருமில்ல."

"ஒன்மேல ஒரு தூசிபட பொறுப்பேனா..."

"நிசந்தான். தூசிபட சம்மதிக்க மாட்டியரு. ஏன்னா. அந்தச் சாக்குல தூசியத் தட்டுறது மாதிரி என்னத் தட்டலாம் பாரும். கடைசில ஒம்மால நான்தான் அவமானப்பட்டேன்."

"விஷயம் சொல்லு. கண்ணு. என் ராசாத்தி இல்ல."

"பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஒமக்கென்ன, அந்த ஆலமரத்தடில அப்டிப் பேசிப்பிட்டிரு. என்னை நீரே அப்பிடிப் பேசிட்டாதாலே யாரு வேணுமுன்னாலும் எப்படி வேணுமுன்னாலும் ஏசலாமுன்னு ஆயிப் போச்சு. நான் பழனிச்சாமி அண்ணாச்சி. சீ. எவன் அண்ணாச்சி. பழனிச்சாமி வீட்டு வழியா சிவனேன்னு போய்க்கிட்டு இருக்கேன். பேச்சியம்மா புருஷன், வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சு ஏதோ கேட்கப் போனான். அதுக்குள்ள அவன் பெண்டாட்டி பேச்சி என்னை அவன்கூட போனவள், இவன்கூட போனவள், அவளே. இவளேன்னு கண்டபடி திட்டிட்டா..."

"செறுக்கிய கொண்டச் சிரைக்கணும். இவள் மட்டும் கல்யாணம் ஆவுறதுக்கு முன்னால யோக்கியமா? நீ அவள் நாக்கைப் பிடுங்குறது மாதிரி கேட்டிருக்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/72&oldid=1243502" இலிருந்து மீள்விக்கப்பட்டது