பக்கம்:சாமியாடிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

71

சாமியாடிகள் 71

"நான் அப்டிக் கேட்டிருந்தால் அங்கேயே என்னை ஒரே நொறுக்காய் நொறுக்கியிருப்பாங்க. நீரும் அங்க வந்து நான்தான் ரெண்டு குடும்பத்தையும் துண்டு போடுறதாச் சொல்லியிருப்பியரு. ஒம்மால நான் பட்ட அவமானம் போதுமுய்யா."

"என் ரத்தம் எப்டிக் கொதிக்குது தெரியுமா. பழனிச்சாமி மச்சான் தட்டிக் கேட்கலியா..."

"சரியான ஆள். கிள்ளி மனுஷன். பேச்சியம்மாவையும் கிள்ளி விட்டு, என்னையும் தாலாட்டுற மாதிரிப் பேசுறாரு. கடைசில ஒம்மப் பார்த்து அறைக்குள்ளதான் ஆசையோட வெட்கப்பட்டேன்னா.. இப்போ அம்பலத்துலயும் வெட்கப்பட வேண்டியதாப் போச்சு. என்ன பேச்சை பேசிட்டா..."

"இருக்கட்டும். இருக்கட்டும். அவள ஒன் காலுல விழ வைக்கேன்."

"அந்தக் குடும்பமே என் காலுல விழத்தான் போவுது. ஆனால் ஒம்மால இல்ல. நம்ம குலதெய்வம் சுடலமாட சாமியால."

"என்ன பிள்ள உளறுற."

"அது கிடக்கட்டும். நம்ம சுடலைக்கு எப்போ கொடை கொடுக்கோம்."

"தெரியாதது மாதிரி கேட்கிறீயே. ஆடிக் கடைசி வெள்ளியில..." "அத மொதல் வெள்ளியில கொடுத்தா என்ன.."

"அது முடியாதே... கரும்பட்டையான் குலதெய்வம் காளியம்மனுக்கு முதல் வெள்ளியில வழக்கமாக கொடுக்காங்க."

"அவங்க வழக்கம் கிடக்கட்டும். அந்த வழக்கத்த ஒடச்சி. நம்ம மாடனுக்கு ஏன் முதல் வெள்ளியில கொடுக்கப்படாது. ஏதும் சட்டமா. தர்மமா."

"கொடுக்கக்கூடாதுன்னு இல்ல. பரம்பர பரம்பரையாய் வருகிற வழக்கம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/73&oldid=1243503" இலிருந்து மீள்விக்கப்பட்டது