பக்கம்:சாமியாடிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

81

சாமியாடிகள் 81

இன்றும் எதிர்த்துப் பேசலாம் என்று ஒரளவு பயந்தவளுக்கு, கோலவடிவின் மெளனம் மனதைக் கொடி கட்டிப் பறக்கச் செய்தது. கோலவடிவின் முதுகைப் பிடித்து, துளசிங்கம் பக்கமாகத் தள்ளி விட்டபடியே பேசினாள்.

"இதுல யோசிக்கதுக்கு என்ன இருக்கு கோலம்..? குளிச்சிட்டு லட்சுமி மாதிரி தெரியுற ஒன் முகத்துல குங்குமம் வச்சால், நீ மகாலட்சுமி மாதிரி தெரிவே. துளசிங்கம் காத்திருக்கான் பாரு. ஆயிரத்தெட்டு வேலைய விட்டுட்டு ஒனக்காவ நிக்கான் பாரு. நீ நிமுத்துனாதான அவன் குங்குமம் வைக்க முடியுைம். காலங்காத்தால எதை வேணுமுன்னாலும் வேண்டாமுன்னு சொல்லலாம். குங்குமத்த அப்டித் தட்டலாமா. கம்மாத்தான் வைக்கப்போறான். தலய நிமுத்து கோலம்.”

கோலவடிவு கோடு போட்டுக் கொண்டிருந்த பெருவிரல் சுழற்சியை நிறுத்தாமல், மனதுக்குள் கழன்று கொண்டிருந்தாள். குங்குமம் வைக்கிறது நல்லதுதான். ஆனால் இவர். இவரு எப்டி வைக்கலாம். எப்டி என்னைத் தொடவிடலாம். விடப்படாது. கூடவே கூடாது. பாவம் தப்பா நெனப்பாரோ. தப்பா நெனப்பாரேன்னு தப்பு செய்ய முடியுமா..? வேணுமுன்னா அவரு கைபடாமல் வைக்க முடியுமுன்னா வைக்கட்டும். அதெப்டி முடியும். இதை அத்தை சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கே. சீ நேருக்கு நேரா. அவரு ஒன்னும் வைக்கப்படாதுன்னு எப்டிச் சொல்றதாம். தயவு தாட்சண்யமுன்னு ஒன்று இருக்குதுல்லா. அவரு குங்குமம் வைக்கிறதால வேற அர்த்தம் எப்டி வரும். வரவே வராது. வரவிடவும் படாது. அதுக்காக ஒரு ஆம்புள அதுவும் வாலிபன் ஒரு பொம்புளைக்கு அதுவும் சின்னஞ்சிறுசுக்கு. சீ."

துளசிங்கத்திற்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது. சற்று அவசரம் வந்தது. அந்த இரண்டும் கலக்கப் பேசினான்.

"எனக்கு நேரமாவுது சித்தி. நீயே அவளுக்கு வச்சிவிடு. நான் வாறேன் சித்தி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/83&oldid=1243513" இலிருந்து மீள்விக்கப்பட்டது