பக்கம்:சாமியாடிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

83

சாமியாடிகள் 83

தொட்டத. ஏய் அவரு எங்கே தொட்டாரு. குங்குமம் வச்சாரு. பூசாரி வைக்கது மாதிரி. அவ்வளவுதான். சரி போவட்டும். நல்ல வேள. யாரும் பாக்கல. குங்குமம் வச்சதும் நல்லவேள. யாரும் பாக்காததும் நல்லவேள.

கோலவடிவு ஆடாது அசையாது சிரித்து நின்றாள். மீண்டும் பெருவிரலால் தரை கிழித்து கவிழ்ந்த தலையில் நிமிர முயன்ற கண்களை அரைவட்டம் போடவைத்து, குங்குமம் வைத்தவனை சூட்சமச் சிரிப்போடு பார்த்தாள். அலங்காரி விளக்கினாள்.

"ஏய் மவனே. துளசிங்கம். என் மருமகள். என் ராசாத்திக்கு இந்த குங்குமம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாருடா. ஒரேடியாய் சிமிண்டு உரமுன்னு அலையாதடா. அழக ரசிக்கவும் பழகிக்கடா. என் ராசாத்திக்கு குங்குமம் நெருப்பு நிலா மாதிரி இருக்கதப் பாரு. குங்குத்துக்கு மத்தில வெத்து இடம் இருந்தா அது விளங்காதுன்னு அர்த்தம். நம்ம கோலத்துக்கு முழுசா இருக்கு. அதிர்ஷ்டக்காரி. பாருடா. எப்டி இருக்குன்னு."

"நீயே பார்த்துக்கிட்டு இரு. எனக்கு ரயிலுக்கு நேரமாயிட்டு. நான் வாறேன்."

கோலவடிவு தலையை நிமிர்த்தியபோது, துளசிங்கம் கிணற்றைத் தாண்டி போய் வாய்க்கால் பக்கம் போய்விட்டான். அவளுக்குக் கோபம். போறேன்னு என்கிட்ட சொல்லலியே. சித்தி போறேன்னு சொல்லாம போறேன்னு பொதுப்படையாச் சொன்னதுல இருந்து அவரு எனக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கார்னு அர்த்தம். அய்யய்யோ நான் என்னெல்லாமோ நினைக்கேனே. ஏதோ முகத்த நிமுத்துனேன். ஏதோ குங்குமம் வச்சார். அதோட சரி. அதுக்கு மேல. அர்த்தப் படுத்துதல். அது. தப்பு. தப்பு.

அலங்காரிக்கு கொஞ்சம் பயம் வந்தது. கோலவடிவை, ஒரு பக்கமாய் சாய்த்து பிடித்து அணைத்தபடியே கெஞ்சுவதுபோல் கேட்டாள்.

"வீட்ல குங்குமம் வச்சத.சொல்லுவியோ. எப்பா.. என் ராசாத்தி எப்படி இருக்காள்...? இப்ப தான் பிறந்த குழந்தை மாதிரி. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/85&oldid=1243515" இலிருந்து மீள்விக்கப்பட்டது