பக்கம்:சாமியாடிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

சு. சமுத்திரம்

84 சு. சமுத்திரம்

ஊரு நாகரீகம் இல்லாதது பாரு. நல்லுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் பாராதது பாரு... அதனால்தான் சொன்னே.... சொல்லமாட்டல்லா."

அலங்காரி, அவள்-முகத்தை நிமிர்த்தப் போனபோது, கோலவடிவு அவள் பிடியில் இருந்து திமிறி, விலகி, நின்று கொண்டாள். குங்குமம் அழிஞ்சுடப்படாதே... கலையுறது சக சந்தான்; ஆனால் காலங்காத்தாலயே கலையப்படாதே.

பம்ப் செட்டில் தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது. ஸ்விட்சை ஆப் செய்யப் போன கோலவடிவு, சரல் மேட்டில் கிடந்த மூங்கில் கழியை எடுத்து, தூர நின்றபடியே ஸ்விட்சை நிறுத்தினாள். இல்லையானால், தண்ணிருக்குப் பக்கத்துல போயி, அது நெத்தில தெறிச்சு குங்குமம் கரைஞ்சு. சீ . கரையத்தான் செய்யும். ஆனால் மத்தில கரைஞ்சு வட்டக்கோடு போட்டது மாதிரி இருக்க அபசகுனமுன்னு அத்த சொல்றாளே. அதுக்காகத்தான் வேற எதுக்காகவும் இல்ல. ஆமா. இல்ல. இல்ல. இல்லவே இல்லை.

அலங்காரி, இந்தச் சமயம் பார்த்து, தனது தோளில் கிடந்த புடவையை எடுத்து, உதறினாள். அதிலிருந்த தண்ணிர் கோலவடிவின் முகத்தல் தெறித்தது. கோலம் ஆடிப்போய்விட்டாள். குங்குமம் கரைந்திருக்குமோ, அத்தைகிட்ட கேட்போமா வேண்டாம். முகத்த நிமுத்துவோம். அழிஞ்சிருந்தா அத்தயே சொல்லுவாளே. குங்குமம் வைக்கும்போது நாலு விரலால தலையை எப்டி தட்டுனாரு. தட்டலடி தட்டல. ஒனக்கு தட்டுனது மாதிரி தெரிஞ்சுது. அவரு ஒண்னும் தட்டல.

கோலவடிவு அலங்காரிக்கு முன்னால் போய் நின்றாள். முகத்தை நிமிர்த்திக் காட்டினாள். அவளோ தன்பணி அப்போதைக்கு முடிந்து விட்ட திருப்தியில், உதறிய சேலையை வளைத்து இடது கையில் குறுக்காய்ப் போட்டபடி இப்போது பாவாடையை உதறினாள். அத்தையிடமிருந்து துள்ளிக் குதித்த கோலவடிவு கையோடு கண்ணாடி கொண்டு வராததுக்காக வருந்தினாள். பிறகு ஒரு யுக்தி வந்த மகிழ்ச்சியில் கமலைக் கிடக்கில் குனிந்து பார்த்தாள். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/86&oldid=1243516" இலிருந்து மீள்விக்கப்பட்டது