பக்கம்:சாமியாடிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சு. சமுத்திரம்

அப்படி ஒன்றும் பெரிசா இல்லை என்பதுபோல் நினைத்துக் கொண்டு சில பெண்கள் அந்தப் பாட்டின் ஒரு வரிக்கு அடுத்த வரியைப் பாடினார்கள்.

"ஏமுழா ரோசாப்பூ. சினிமாப் பாட்ட கேக்கவிடேமிழா. நீ பாடுறதவிட கழுத கனச்சால் நல்லா இருக்கும்."

"நீ குட்டிச்சுவர் பக்கத்துல நிக்கிறவ. ஒனக்கு அப்படித்தான் தெரியும். அதோட ஒன் குரல விட என் குரலு மோசமில்ல."

வாடாப்பூவும், ரோசாப்பூவும் சங்கீதத்தைச் சண்டையாக்கப் போனபோது, அலங்காரி இன்னொரு பெண்ணோடு வந்து பேசிக் கொண்டே உட்கார்ந்தாள்.

"நம்ம ரோசாப்பூ குரலுக்கு ஏதுழா ஈடு. எங்க துளசிங்கத்துக் கிட்ட சொல்லி அவள சினிமாவுல பின்னணிப் பாடகியாய் போடலாமுன்னு யோசித்துக்கிட்டு இருக்கேன்."

"இவ பாடுனான்னா ரேடியோ பெட்டியே வெடிச்சிப் போவும்.”

"இப்படித்தான் சுசீலாவயும் சொன்னாவுளாம். சானகியவும் நெனச்சாவளாம் வேணுமுன்னால் பாரேன். துளசிங்கம் வரட்டும்."

"இது என்ன புதுசா லீலாவதிய கூட்டிட்டு வந்திருக்கே..." "ஏன் வரப்படாதா... மேலத்தெருக்காரிவ வரும்போது, கீழத் தெருக்காரி வரப்படாதா..." -

"ஒரே ஊரையும் ஏன் சித்தி துண்டு போடுற? ஒரு நாளும் வராதவளாச்சேன்னு கேட்டோம்.”

"நேத்து இங்க முழுசா வரலியா. இன்னைக்கு வேற கடையில பீடி போடணுமா.. என் கொழுந்தன் மவளுக்கு சுத்தத் தெரியும். சொல்லிக் கொடுத்திருக்கேன். அதனால கும்புட்டுக் கூத்தாடி கட்டியாந்திருக்கேன்."

"பீடி நல்லா இல்லாட்டா. ஏசெண்டு பீடிகள கழிச்சிடப் போறான். அப்புறம் நஷ்டம் ஒனக்குத் தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/90&oldid=1243528" இலிருந்து மீள்விக்கப்பட்டது