பக்கம்:சாமியாடிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

89


“என்ன அம்மாளு அப்படிப் பேசுறே. பீடி ஏசெண்டு பால்யாண்டிக்கு இவிய பீடியக் கழிக்கிற தைரியம் வருமா..."

இப்படிச் சொன்ன ராசகிளி ஏன் சொன்னோம் என்பது மாதிரி நாக்கைக் கடித்தபோது, இந்தப் பெண்கள் அவளைச் சூதோடு பார்த்துவிட்டு, வாயற்றவர்கள் போல் பேச்சுக்குத் திடீர் பிரேக் போட்டதால், அப்படிப் போடப்படும் வாகனச் சக்கரம் மாதிரி இவர்கள் நாக்குகளும் குளறியபடியே உளறின. இதைப் புரிந்து கொண்ட அலங்காரி, சந்திராவைப் பார்த்துப் பேச்சை மாற்றினாள்.

"சந்திரா. என் மருமவளே. ஒன்ன பழையபடியும் இங்க பாக்கதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..."

சந்திரா, அலங்காரி அத்தையை வைத்தகண் வைத்தபடி பார்த்தாள். அம்மா எப்படித் திட்டினாலும் இந்த அத்தை மனசில வச்சுக்கலியேட் என்கிட்ட கொஞ்சங்கூட கோபத்தக் காட்டலியே. இந்த, கோலவடிவுக்காவ, அம்மா அத்தைய அப்டிப் பேசியிருக்கப் படாது. கடைசில எந்தக் கோலவடிவுக்காவ பேசுனேனோ. அந்தக் கோலவடிவே கால வாரிட்டாளே.

"மருமவளே சந்திரா. அத்தைக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு கோவமா."

"இல்லத்தே. இல்ல. எனக்குப் புத்தி வந்துட்டு. எந்த நாயி சந்தைக்குப்போனா நமக்கென்ன... நீங்க... எதையும் மனசுல'

எடுத்துக்காதிய அத்தே."

"அப்டி எடுத்திருந்தா ஒன்கிட்ட பேசுவனா."

அலங்காரி கொழுந்தன் மகள் லீலாவதியின் விலாவில் இடித்தாள். 'சொல்லிக் கொடுத்ததை சரியாய் செய்யேமிழா. எருமைமாடு" என்றாள் ரகசியமாக வானொலிச் சினிமாப் பாட்டில் மெய்மறந்து போன லீலாவதி, சித்தி இடித்த இடி தாங்க முடியாமல் விழித்தாள். எல்லாப் பெண்களும் பீடி சுற்றுவது பற்றி, அவள் சொல்லிக் கொடுத்ததாக நினைத்தபோது அவள் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/91&oldid=1243529" இலிருந்து மீள்விக்கப்பட்டது